கட்டுமான அனுமதிக்கேற்ப வரையறுக்கப்பட்ட கட்டிடங்கள்
நகரம் அல்லது நகர் பகுதிக்கான திட்டமிடலை நகரமைப்பு (Town Planning) என்கிறோம்.
நகரம் அல்லது நகர் பகுதிக்கான திட்டமிடலை நகரமைப்பு (Town Planning) என்கிறோம். அதாவது, ஒரு பகுதியில் எதிர்கால வளர்ச்சியை கண்காணித்து, அந்த வளர்ச்சியானது ஒழுங்கான, மக்களின் பாதுகாப்பு, நலவாழ்வு, வாழ்க்கை வசதிகள், இட நேர்த்தி ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டிடவியல், கட்டுமான பொறியியல், புவியியல், பொருளாதாரம், சமூகவியல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்படுவதாகும்.
அணுகு பாதை
பாதை என்பது ஒரு மனை அல்லது ஒரு கட்டிடத்திற்குள் செல்ல உதவும் அணுகு பாதையாகும். அது, பொது வழியாகவோ, தனியார் வழியாகவோ இருக்கலாம். பொது வழி என்பது அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமானதாகும். தனியார் வழி என்பது தனியார் அல்லது அந்த வழியை ஒட்டி குடியிருப்போருக்கு சொந்தமானது. குறிப்பிட்ட மனை, மனைப்பிரிவு அல்லது கட்டிடத்திற்கு நகர் ஊரமைப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பிலிருந்து உரிய அனுமதி பெற அணுகு பாதை அவசியம்.
கட்டிடம்
கட்டிடம் என்பது வீடு, புற வீடு (Out House) தொழுவம், கழிவறை, கிடங்கு, கொட்டகை, குடிசை, சுவர், (மதில் சுவரை தவிர்த்து) மற்றும் செங்கல், மண், மரம், உலோகம், அல்லது வேறு பொருட்களாலான கட்டுமானத்துடன் கூடிய கட்டமைப்பு ஆகும். மேலும், கடைக்கால் (Foundation) எதுவுமின்றி தரையில் சக்கரங்களின் மேல் உள்ள கட்டுமானமும் மேற்கண்ட வகையில் சேரும்.
குழும கட்டிடம் (Assembly Building)
ஒரு கட்டிடம் அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதி, 50–க்கும் குறையாத நபர்கள், கேளிக்கை, பொழுதுபோக்கு, சமுதாயம், ஆன்மிகம், பயணம் போன்ற நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது குழும கட்டிடம் என்ற வரையறைக்குள் வருகிறது.
முன்புற திறந்தவெளி
ஒரு மனையில் சாலை வரம்பிற்கும் கட்டிட முன்புற வரம்பு கோட்டிற்கும் இடையே உள்ள இடம், முன்பக்க திறந்தவெளி (Front Open Space) எனப்படும். இந்த முன்பக்க திறந்தவெளியானது மனையின் முன்புறம் உள்ள சாலையின் அகலத்தையும், கட்டிடத்தின் உயரத்தையும் பொறுத்து தீர்மானிக்கப்படும், பொதுவாக, அந்த திறந்தவெளியில் கட்டுமானம் எதுவும் அமைக்கக்கூடாது. ஒரு மனையின் முன்பக்க திறந்தவெளி குறைந்தபட்சம் 1.5 மீட்டரும், அதிகபட்சம் 7 மீட்டரும் இருக்கலாம்.
பண்ணை வீடு
விவசாயம் அல்லது தோட்ட பண்ணை சார்ந்த உபயோகத்திற்காக அமைக்கப்படும் கட்டிடம் பண்ணை வீடு (Farm House) ஆகும். பயிர்த்தொழில் அல்லது தோட்ட வேலை தொடர்பில்லாத வகையில் கட்டப்படும் கட்டிடம் பண்ணை வீடு ஆகாது.
சிறப்புக் கட்டிடம்(Special Building)
* இரண்டு தளங்களுக்கு மேல் நான்கு தளங்கள் வரையுள்ள குடியிருப்பு அல்லது வணிகக் கட்டிடம்
* ஆறு குடியிருப்புகளுக்கும் மேல் எண்ணிக்கை கொண்ட குடியிருப்பு கட்டிடம்
* 300 சதுர மீட்டருக்கும் மேற்பட்ட தளப்பரப்பு கொண்ட வணிக கட்டிடம் ஆகியவை சிறப்பு கட்டிட வகைகளில் வருகின்றன.
பல மாடிக்கட்டிடம்
* தரைதளம் உள்ளிட்ட நான்கு தளங்களுக்கு அதிகமான தளங்கள் கொண்ட கட்டிடம் பலமாடிக் கட்டிடம் ஆகும்.
* தரை தளம் தூண் தளமாக (Stilt Floor) அமைக்கப்பட்டு, வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்படும் நிலையில், ஐந்து தளங்களுக்கு மேற்பட்ட தளம் பலமாடி கட்டிடமாகும்.

Related Tags :
Next Story