இல்லத்தை அழகு செய்யும் உள் அலங்காரம்


இல்லத்தை  அழகு செய்யும்  உள்  அலங்காரம்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:00 PM GMT (Updated: 1 Dec 2017 1:20 PM GMT)

சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் அதை அழகாக வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள்.

சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் அதை அழகாக வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள். வீட்டில் செய்யப்படும் உள் அலங்காரம் (இண்டீரியர் டெக்கரே‌ஷன்) வி‌ஷயங்கள் அனைத்திற்கும் நிபுணர்களின் துணையின்றி நாமே செய்துகொள்ள முடியும். அதுபோன்ற சுலபமான வழிகள் பற்றி நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை கவனிக்கலாம்.  

களிமண் பொம்மைகள்

‘டெரகோட்டா’ வகைகளை சேர்ந்த விதவிதமான அழகிய களிமண் பொம்மைகள் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சிக்கனமாக கைவினை பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். களிமண்ணால் செய்யப்பட்ட அடையாளமே தெரியாதவாறு பல்வேறு வண்னங்களில், வேலைப்பாடுகள் நிறைந்த பொம்மைகளை வாங்கி வந்து அறைகளின் கார்னர் பகுதிகள் அல்லது மையப்பகுதிகளில் அவற்றின் தன்மைக்கேற்ப அமைத்துக்கொண்டால் வீட்டின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமையும்.

உலோக பொருட்கள்

குறிப்பாக, செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்களை அதிகப்படியான பட்ஜெட்டில் வாங்கி வைக்கும்போது அதற்கேற்ப அழகு இருக்கத்தான் செய்யும் என்றாலும், களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களில் உள்ள எளிமையில் அமைந்த அழகை பலரும் விரும்புவதாக உள்

அலங்கார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிள்ளையார் சிலைகள்

பலரும் விதவிதமான விநாயகர் உருவங்களை வீட்டின் முன்புறத்தில் வைப்பது வழக்கம். அத்தகைய, பிள்ளையார் சிலைகளை மர ஸ்டூல்களின் மீதுதான் வைக்க வேண்டும் என்பது பொதுவான வாஸ்து முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் பயன்படுத்தும் அழகிய வேலைப்பாடுகளுடன், மணிகளும் பொருத்திய பலவண்ண துணிகளால் தயாரிக்கப்பட்ட விதவிதமான பொருட்களை ஆங்காங்கே அமைத்தும் அறைகளை அழகாக்கலாம்.

‘மார்க்கர் போர்டு’

சமையல் அறை மற்றும் ஹால் பகுதிகளில் வெள்ளை நிற ‘ரைட்டிங் போர்டு’ ஒன்றை மாட்டி வைத்துக்கொண்டால், பல்வேறு முக்கிய தகவல்கள் அல்லது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை உடனடியாக குறித்து வைக்க எளிதாக இருக்கும். அதன் மூலம், பேனா, பேப்பர் போன்றவற்றை டென்‌ஷனுடன் தேடவேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக, முக்கியமான வி‌ஷயங்களைப் பதிவு செய்யவும் கேஸ் தீரும் தேதி, மின்சார கட்டணம் செலுத்தும் தேதி மற்றும் உறவினர்களின் திருமண தேதி போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ள என்று பல விதங்களில் பயன்படும்.

Next Story