கச்சிதமாக ‘பெயிண்டிங்’ செய்ய பொருத்தமான ‘பிரஷ்கள்’


கச்சிதமாக ‘பெயிண்டிங்’ செய்ய பொருத்தமான ‘பிரஷ்கள்’
x
தினத்தந்தி 9 Dec 2017 4:35 AM GMT (Updated: 9 Dec 2017 4:35 AM GMT)

புது வீடுகளுக்கு பெயிண்டர்கள் அழகான வண்ணங்களை தேர்வு செய்து பூசி விடுவார்கள். பிறகு ஓரிரு வருடங்கள் கழித்து ஆங்காங்கே ‘பெயிண்டிங்’ பணியை வீட்டு உரிமையாளரே செய்ய வேண்டியதாக இருக்கும்.

புது வீடுகளுக்கு பெயிண்டர்கள் அழகான வண்ணங்களை தேர்வு செய்து பூசி விடுவார்கள். பிறகு ஓரிரு வருடங்கள் கழித்து ஆங்காங்கே ‘பெயிண்டிங்’ பணியை வீட்டு உரிமையாளரே செய்ய வேண்டியதாக இருக்கும். சிறிய வேலைகளுக்கெல்லாம் பெயிண்டரை அழைப்பது சிக்கன பட்ஜெட்டுக்கு உதவாது. அதனால் சில அடிப்படைகளை தெரிந்து கொண்டு வீடுகளில் அவரவரே சிறுசிறு வேலைகளை செய்து கொள்ளலாம்.

சிறிய சைஸ் பிரஷ்

குறிப்பாக ‘பெயிண்ட் பிரஷ்கள்’ வாங்கும்போது முக்கியமாக பார்க்க வேண்டியது அவற்றின் அகலம் ஆகும். அதன் பிறகு அவற்றின் தரம் பற்றி கவனிக்கலாம். வீடுகளில் ஆங்காங்கே ‘டச் அப்’ வேலைகளை செய்யும்போது, மிகவும் குறுகலான இடங்களிலும் ‘பெயிண்டிங்’ செய்ய வேண்டியதாக இருக்கும். அந்த சமயங்களில் ஒரு அங்குல அகலம் உள்ள ‘பிரஷ்’ வகைகள் சரியாக இருக்கும்.

பெரிய சைஸ் பிரஷ்

கொஞ்சம் அகலமான இடங்கள் என்றால் இரண்டு அங்குல ‘பிரஷ்’ வகைகளை பயன்படுத்த வேண்டும். சுவர் பரப்புகளில் பெயிண்டிங் செய்வதற்கு மூன்று அங்குல ‘பிரஷ்’ சரியான தேர்வாக இருக்கும். வெளிப்புற சுவர்கள், விளிம்புகள், ஒரங்கள் ஆகியவற்றை பூசுவதற்கு நான்கு அங்குல ‘பிரஷ்’ பொருத்தமாக இருக்கும்.

Next Story