நவீன சமையலறை அமைப்பதற்கான குறிப்புகள்
சமையலறையில் வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை கண்களுக்கு தென்படாமல் வைக்கவும், சமையலறையை கண்கவரும் சுத்தத்துடன் பராமரிக்க உதவி செய்யவும் ‘மாடுலர் கிச்சன்’ அமைப்பு பயன்படுகிறது.
சமையலறையில் வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை கண்களுக்கு தென்படாமல் வைக்கவும், சமையலறையை கண்கவரும் சுத்தத்துடன் பராமரிக்க உதவி செய்யவும் ‘மாடுலர் கிச்சன்’ அமைப்பு பயன்படுகிறது. இன்றைய ‘டிரெண்டுகளில்’ ஒன்றாக உள்ள அவற்றை கச்சிதமாக பராமரிப்பது பற்றி உள்அலங்கார நிபுணர்கள் பல குறிப்புகளை தந்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
ஆரம்ப திட்டம்
வீடுகளின் கட்டுமான நிலையில் ‘மாடுலர் கிச்சன்’ அமைக்க முடிவு செய்து விட்டால், அனுபவம் மிக்க டிசைனர் உதவி அவசியம். கப்போர்டு மற்றும் கேபின் ஆகியவற்றை அமைத்த பின்னரே சமையல் மேடையை கட்டமைக்க வேண்டும். அதனால், கட்டுமான பணிகளின்போதே சமையலறையில் அமைக்கப்படவேண்டிய ‘கன்சீல்டு’ (சுவருக்குள் பதிக்கப்படுபவை) பகுதிகள் பற்றி டிசைனரிடம் விவரங்களை பெறவேண்டும்.
அலமாரி அமைப்பு
பொருட்கள் வைக்கப்படும் ‘பிளைவுட்’ அலமாரிகளை விடவும் ஒன்றரை அங்குலம் அளவு அதிக நீளம் கொண்ட கிரானைட் மேடை அமைக்கலாம். அதன் மூலம் சுத்தம் செய்யும்போது ஏற்படும் நீர்க்கசிவு காரணமாக அழுக்கு மற்றும் பிசுபிசுப்பு போன்றவை தடுக்கப்படும். ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ வகை அலமாரிகளில் ஈரப்பதம் காரணமாக துரு பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால், கூடுமானவரை ஸ்டீல் அமைப்பை தவிர்த்து பிளைவுட் கப்போர்டுகளாக அமைத்துக்கொள்ளலாம்.
எரிவாயு குழாய்
சமையல் எரிவாயு இணைப்பு குழாய்களை அவ்வப்போது சோதனை செய்ய எளிதாக இருக்கும்படி பொருத்த வேண்டும். அடுப்புக்கு கீழ்ப்புறம் பொருட்களுக்கான அலமாரி அமைப்புகளை தவிர்க்கவேண்டும். குறிப்பாக, சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது பாதுகாப்பானது.
‘சிங்க்’ பாதுகாப்பு
நவீன சமையலறையில் பூச்சிகள் மற்றும் எலிகள் வந்துபோகும் இடமாக ‘சிங்க்’ மாறிவிடாமல் இருக்க சிங்க்-ல் இருந்து வெளிப்புறம் செல்லும் குழாய்கள் தக்க வலை கொண்டு மூடப்படவேண்டும். காரணம், அந்த குழாய்கள் மூலம் சாக்கடையில் இருந்து பூச்சிகள் மற்றும் எலிகள் உள்ளே நுழையும் வாய்ப்பு உண்டாகிறது. மேலும், அவற்றில் நீர்க்கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக ‘சிங்க்’ அடிப்புறத்தில் தேங்கிய வண்டல்களை அகற்றுவது முக்கியம்.
சிம்னி சுத்தம்
கியாஸ் அடுப்புக்கு மேற்புறம் அமைக்கப்பட்டுள்ள சிம்னியை சுத்தமாக பராமரிப்பது அவசியம். சிம்னியை இயக்காமல் சமையல் செய்யும் பட்சத்தில் சுலபமாக பிசுபிசுப்பு படிகிறது. அவ்வப்போது சிம்னியை இயக்க மறந்து சமையல் செய்பவர்களுக்கு உதவியாக தற்போது ‘ஆட்டோமேட்டிக் சிம்னி’ வகைகள் கிடைக்கின்றன. அதன் பில்டர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வெந்நீரில் கழுவலாம். அதாவது, இரவு வெந்நீரில் போட்டு வைத்திருந்து, காலையில் எடுத்து சோப் கொண்டு கழுவினால் எளிதாக சுத்தமாகிவிடும். பிசுபிசுப்பு அதிகமாக இருந்தால், திரவ வகை கிளனர் கொண்டு சுத்தம் செய்துகொள்ளலாம்.
சமையலறை டைல்ஸ்
சமையலறைக்கான டைல்ஸ் பதிக்கும்போது கீழ்ப்பகுதி அடர் நிறத்திலும், மேல்பகுதி வெளிர் நிறத்திலும் அமைத்தால் சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்புக்கு எளிதாக இருக்கும். அலமாரி கைப்பிடிகள் கழன்று போகாத அளவு சரியாகவும், உறுதியாகவும் பொருத்த வேண்டும். கைப்பிடியின் மீது பொருட்களை வைப்பது, குழந்தைகள் அவற்றை இழுத்து விளையாடுவது போன்றவற்றால் அவை கழன்று விடலாம். அதனால், கைப்பிடிகள் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். துரு பிடிக்காமல் தடுக்க 10 நாட்களுக்கு ஒரு முறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.

Related Tags :
Next Story