கான்கிரீட்டை பாதுகாக்கும் ரசாயனம்


கான்கிரீட்டை பாதுகாக்கும் ரசாயனம்
x
தினத்தந்தி 9 Dec 2017 10:17 AM IST (Updated: 9 Dec 2017 10:16 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கான்கிரீட் கட்டுமான பணிகளில் பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டமைப்புகளை விரைவாகவும், வலுவாகவும் உருவாக்க பயன்படும் ரசாயனத்தை ‘சூப்பர் பிளாஸ்டிசைசர்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

ன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கான்கிரீட் கட்டுமான பணிகளில் பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டமைப்புகளை விரைவாகவும், வலுவாகவும் உருவாக்க பயன்படும் ரசாயனத்தை ‘சூப்பர் பிளாஸ்டிசைசர்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

கட்டிடங்களின் வெவ்வேறு பாகங்களை முன்னதாகவே தயாரித்து எடுத்து வந்து, பயன்படுத்த வழி செய்யும் ‘பிரிகாஸ்ட்’ தொழில்நுட்ப வேலைகளில் மேற்கண்ட ‘பிளாஸ்டிசைசர்’ பெரிதும் உதவுகிறது. சிமெண்டு மற்றும் தண்ணீர் ஆகியவை கலக்கப்படும்போது வெப்பம் உற்பத்தியாகிறது. அதனை தொடர்ந்து கான்கிரீட் உறுதி பெறும் சமயத்தில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் அவசியமாக உள்ளது.

சிமெண்டு துகள்களை சுற்றி போர்வைபோல மூடிக்கொள்ளும் தன்மை பெற்ற ‘பிளாஸ்டிசைசர்கள்’ அதற்குள் உள்ள ஈரத்தை வெளியே செல்ல விடாமல் தக்க வைத்துக்கொள்வதால், கான்கிரீட் விரைவில் ‘செட்’ ஆக தகுந்த சூழல் ஏற்படுகிறது. சுற்றுபுற சூழலில் உள்ள வெப்பம் அல்லது குளிர் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக கான்கிரீட் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் தன்மை பெற்றதாகவும் ‘பிளாஸ்டிசைசர்கள்’ செயல்படுகின்றன.

Next Story