கட்டிட வலிமையை அறிய உதவும் சோதனைகள்


கட்டிட வலிமையை அறிய உதவும் சோதனைகள்
x
தினத்தந்தி 6 Jan 2018 10:00 AM IST (Updated: 6 Jan 2018 9:51 AM IST)
t-max-icont-min-icon

பல ஆண்டுகள் குடியிருப்பாக பயன்பட்டு வரும் பழைய கட்டிடங்களின் வலிமை மற்றும் தரம் பற்றி கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக, எந்த ஒரு கட்டுமான அமைப்பாக இருந்தாலும் கட்டி முடிக்கப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தால் 5 வருடங்களுக்கு ஒரு முறையும், 30 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தால் 3 வருடங்களுக்கு ஒரு முறையும் அதன் வலிமை மற்றும் தரம் பற்றிய சோதனை செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான விதிமுறையாகும்.

அத்தகைய கட்டுமான தரச்சோதனை ‘ஸ்ட்ரக்சுரல் ஆடிட்’ என்று சொல்லப்படுகிறது. அந்த சோதனையில் கட்டிடத்தின் வயது, இதர அமைப்புகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவை பற்றி விரிவான தகவல்கள் தக்க நிபுணர்களின் ஆய்வறிக்கைகளோடு அளிக்கப்படும். சோதனையின்போது செய்யப்படும் ஆய்வுகள் பற்றி இங்கே காணலாம்.

* அரசு அங்கீகாரம் பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள், கட்டிட மதிப்பீட்டாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவால் ‘ஸ்ட்ரக்சுரல்’ சோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் விரிவான தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் வழங்கப்படும்.

* நுண் ஒலியலை சோதனை (அல்ட்ராசானிக் பல்ஸ் வெலாசிட்டி டெஸ்ட்) மூலம் அஸ்திவார வலிமை கணக்கில் கொள்ளப்படும்.

* வெளிப்புற தூண்கள், காலம்கள் ஆகிய அமைப்புகளின் வலிமை பற்றி தெரிந்து கொள்ள ‘காங்கிரீட் கோர் கட்டிங் டெஸ்ட்‘ எனப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மேற்கூரையின் தன்மை மற்றும் வலிமை பற்றி அறிந்து கொள்ள இயலும்.

* சுவர்களில் பூசப்பட்டிருக்கும் கான்கிரீட் மேற்பூச்சுகளின் வலிமை பற்றி அறிந்துகொள்ள ‘ரீ-பவுண்டு ஹாம்மர் டெஸ்ட்’ என்ற வழிமுறை கடைப்பிடிக்கப்படும்.

* கான்கிரீட் அமைப்புகளுக்குள் உள்ள கம்பிகளில் ஏற்பட்டிருக்கும் துரு மற்றும் கட்டிட அரிப்புகள் எந்த அளவு உள்ளது என்று அறிய ‘கார்பனேசன் டெஸ்ட்’ என்ற ஆய்வு செய்யப்படும்.

* பழைய வரைபடத்துடன் தற்போதுள்ள கட்டிட அமைப்பு ஒப்பிட்டு பார்த்து அதிலுள்ள வித்தியாசங்கள் கவனிக்கப்படும். வேறு புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்ட விபரங்கள் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் மாற்றம் ஆகியவை பற்றியும் கணக்கில் கொள்ளப்படும்.

* மின் இணைப்புகள், தண்ணீர் தொட்டிகள், குழாய் அமைப்புகள் போன்றவை எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

Next Story