‘லிப்ட்’ பராமரிப்பில் நிபுணர்களின் குறிப்புகள்


‘லிப்ட்’ பராமரிப்பில் நிபுணர்களின் குறிப்புகள்
x
தினத்தந்தி 13 Jan 2018 3:30 AM IST (Updated: 12 Jan 2018 5:36 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில் அவற்றின் மேல் தளங்களுக்கு செல்ல, லிப்ட் வசதி செய்யப்படுவது வழக்கம்.

கர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில் அவற்றின் மேல் தளங்களுக்கு செல்ல, லிப்ட் வசதி செய்யப்படுவது வழக்கம். நான்கு அடுக்குகளுக்கும் மேல் அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் லிப்ட் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. பொதுவாக, லிப்ட் அமைப்பில் செய்யப்படவேண்டிய பராமரிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பலரும் போதுமான கவனம் செலுத்துவதில்லை என அறியப்பட்டுள்ளது. அதன் பாராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் தரும் குறிப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம்.     

* மின் தடை ஏற்படும் நேரத்தில், லிப்ட் இயங்காது என்னும் அறிவிப்பை தெரிவிக்கப்பட வேண்டும்.

* ஜெனரேட்டர் இருக்கும் பட்சத்தில், மின்சார தடை ஏற்படும்போது, தாமாக அது செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் பராமரிப்பை மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் காலகட்ட இடைவெளியில் முழுமையாக சர்வீஸ் செய்வது பாதுகாப்பு.

* குடியிருப்பின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள் லிப்ட் முறையாக இயங்குவது குறித்து தினமும் கண்காணிப்பது நல்லது.

* குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் லிப்டில் ஏற்படும் பழுதுகள், குறைபாடுகள் ஆகியவற்றை சரி செய்து தரும் ‘வாரண்டி’ மற்றும் இதர பில்கள், ஆவணங்கள் உள்ளிட்ட நடைமுறைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெற வேண்டும்.

* அவசர அழைப்புக்கான தொலைபேசி எண்கள் லிப்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வைக்கப்பட வேண்டும்.

* லிப்டுக்கான கதவுகள், உட்புற தரை பகுதிகள் ஆகியவற்றை தினமும் சரி பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்ய கொள்ளவேண்டும்.

* உட்புற தரைப்பகுதி, சுவர்கள், மேற்பகுதி ஆகியவற்றில் விரிசல்கள் உள்ளதா..? என்பதை தினமும் கவனிக்கவேண்டும்.

* கதவுகள் திறந்து மூடுவதில் சிக்கல்கள் இருந்தால், லிப்ட் இயக்கத்தை நிறுத்தி சரி செய்யப்பட்ட பிறகு இயக்கப்பட வேண்டும்.

Next Story