அஸ்திவார தூண்களுக்கு சம அளவு ஆழம் அவசியம்


அஸ்திவார தூண்களுக்கு சம அளவு ஆழம் அவசியம்
x
தினத்தந்தி 27 Jan 2018 11:17 AM IST (Updated: 27 Jan 2018 11:17 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளின்போது பில்லர்கள் எனப்படும் அஸ்திவார தூண்கள் அமைக்க குழிகள் எடுக்கும்போது, அவை ஒரே அளவு கொண்ட சம மட்டத்தில் அமைய வேண்டும் என்று பொறியாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக பல அடுக்குகள் கொண்ட கட்டிட அமைப்புகளில், தரை மட்ட அளவில் அமைக்கப்படும் அஸ்திவார குழிகள், தக்க கருவிகள் மூலம் அளவிடப்பட்டு சரியான மட்டங்கள் குறிக்கப்பட்டு பில்லர்கள் அமைக்கப்படுகின்றன.

சிறிய கட்டுமான பணிகள்

ஆனால், சிறிய அளவிலான கட்டிட அமைப்புகளில் மேற்கண்ட முறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும், பில்லருக்கான அஸ்திவார குழிகள் வெவ்வேறு ஆழங்களில் இருப்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, கட்டிடத்தின் ஒட்டு மொத்த எடை அஸ்திவார தூண்களுக்கு சம அளவில் செலுத்தப்படுவதில்லை. அந்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, கட்டுமானத்தில் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டிட எடை

தரைப்பரப்பானது ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்போது, அஸ்திவார பில்லருக்கான குழிகள் ஒரே அளவாக இருப்பினும், அடிப்பரப்பில் அவற்றின் ஆழங்கள் மாறுபாடாக அமைந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலையில் நிலத்தடியில் பில்லர்கள் நிறுத்தப்படும் அளவு அனைத்து குழிகளிலும் சமமாக இருக்கவேண்டும். அதன் மூலம் பில்லர்கள் மூலமாக தரைக்கு கடத்தப்படும் கட்டிடத்தின் எடையும் பூமியில் சம அளவில் பரவலாக அமையும்.

‘வாட்டர் டியூப் லெவல்’

அஸ்திவார குழிகள் தேவையான ஆழத்தை விடவும் ஒன்றுக்குக்கொன்று கூடுதலாக அமைந்திருக்கும் பட்சத்தில், ஆற்று மணலை அதனுள் கொட்டி சமப்படுத்திக்கொள்ளலாம். மேலும், ஒரு குழியை அடிப்படையாகக்கொண்டு ‘வாட்டர் டியூப் லெவல்’ உதவியுடன் அனைத்து குழிகளின் தரை மட்டத்தையும் சம அளவில் அமைத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் கட்டுமான குறைகளை தவிர்க்க இயலும் என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Next Story