சிக்கன செலவில் வெளிப்புற தரைத்தளம்


சிக்கன செலவில் வெளிப்புற  தரைத்தளம்
x
தினத்தந்தி 3 Feb 2018 2:15 AM IST (Updated: 2 Feb 2018 4:22 PM IST)
t-max-icont-min-icon

கனவு வீட்டின் ஆரம்ப கட்டுமான பணிகளின்போது வீட்டின் உட்புறம் உள்ள தரைப் பகுதிகளுக்கு எந்த ‘டிசைனில்’ மொசைக், மார்பிள், டைல்ஸ், கிரானைட் ஆகியவற்றை பதிப்பது என்பது கணக்கில் கொள்ளப்படும். மேலும், அந்த கற்களுக்கு தக்கவாறு வீட்டின் உள்புற சுவர்களின் வண்ணங்கள் தேர்வு செய்யப்படுவதும் உண்டு.

வராந்தா தரைப்பரப்பு

வீடுகளின் உள் பக்கம் அமைக்கப்படும் தரைப்பரப்புகளுக்கான கற்களை தேர்வு செய்யும்போது வெளிப்புற வராந்தா பகுதியில் உள்ள தரைப்பரப்பையும் கணக்கில் கொண்டு செயல்படுவது அவசியம். அதன் மூலம் அழகான தரைப்பரப்பை அமைக்க இயலும் என்று உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மீதமான ‘டைல்ஸ்’

அவ்வாறு வெளிப்புற வராந்தா பகுதி தரைகளை அமைப்பதற்கும் வல்லுனர்கள் சிக்கன வழியை காட்டியுள்ளனர். அதாவது, வீட்டின் உள்புற தரைகளுக்கு டைல்ஸ் வகைகளை பதிக்கும்போது மீதமானவை அல்லது வெட்டுப்பட்ட துண்டு டைல்ஸ் வகைகளை வெளிப்புற தரைகளில், அவற்றின் அளவுகளுக்கேற்ப விதவிதமாக பதித்துக்கொள்ளலாம். சிறிய துண்டுகளாக உள்ள மார்பிள் கற்களின் பகுதிகளையும், வெளிப்புற தரைப்பரப்பில் புதிய டிசைனில் பதிக்கலாம். அவ்வாறு பதித்த பிறகு வழக்கமான ‘மெஷின் பாலிஷிங்’ செய்யப்பட வேண்டும்.

இதர பயன்கள்


அவ்வாறு சிறிய துண்டுகளாக மீதமான மார்பிள் கற்களை நவீன தோற்றங்கள் கொண்ட பல்வேறு டிசைன்களில் பதிக்கும்போது, வெளிப்புற டைல்ஸ் வகைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவு இல்லை. மேலும், குளியல் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றின் சுவர்களுக்கும், தோட்டங்கள் மற்றும் நடைபாதைகள் ஆகியவற்றிலும் உடைந்த அல்லது மிகச்சிறிய அளவில் உள்ள டைல்ஸ் வகைகளை பதிக்கலாம். அதன் மூலம் அவை அழகாக மாறுவதோடு, செலவும் குறையும்.

Next Story