ஆச்சரியப்படுத்தும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்
தொழில்நுட்ப வளர்ச்சிகள் முன்னேறிய இன்றைய சூழலில் கட்டுமானத்துறையிலும் ஒவ்வொரு நாளும் புதுமைகள் அரங்கேறி வருகின்றன.
பலமாடி கட்டிடங்களின் மேல்பகுதியில் வாகனங்கள் செல்லும் பாதைகளை அமைத்து சீனாவை சேர்ந்த கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் புதுமை செய்துள்ளனர்.
தென்மேற்கு சீனா
மக்கள் தொகை அதிகமாக உள்ள சீனாவில், கட்டுமானத்துறையில் பல்வேறு யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் தென்மேற்கு பகுதியான ‘நான்ஷன்’ மலையடிவாரம் மற்றும் ‘யாங்க்ஸி’ நதியின் தென்கரை பகுதியில் அமைந்துள்ள ’சோங்கிங்’ நகரம் அதிக மக்கள் தொகை கொண்டதாகும். சுமார் 8 கோடி மக்கள் தொகை கொண்ட சோங்கிங் நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சாலைகள் இணைப்பு
வாகன நெரிசலை தவிர்க்க பெரிய கட்டிடத்தின் மேல்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்தில் இருந்தும், கட்டிடத்தின் மேல்தளத்துக்கு எளிதாக வாகனம் மூலம் செல்வதற்கு இரு வழிப்பாதைகள் கொண்ட சாலை அடுக்குமாடியின் மீது அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகள் இருபதுக்கும் மேற்பட்ட சரிவு பாதைகளின் மூலம் அடுத்த அடுக்கில் உள்ள சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கட்டுமான திறமை
அடுக்குமாடி சாலையின் ஓரம் முழுதும் பெரிய தொட்டிகளில் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், சாலையில் பக்கவாட்டில் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வினோதமான குடியிருப்பு வளாகம், சீனாவின் கட்டுமானத்துறை வல்லுனர்களின் திறமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.
மாடியில் ரயில் பாதை
குறிப்பாக, சீனாவில் 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட பிரத்தியேகமான ரயில்வே பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில்கள் சென்று வரும் செய்தியும் சமீபத்தில் வெளியானது. அந்த ரயில் பாதையும் இதே ‘சோங்கிங்’ நகராட்சிக்குட்பட்ட பகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடியில் செல்லும் ரயிலை தொடர்ந்து, தற்போது அடுக்குமாடி கட்டிடத்தின் மீது சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருவதும் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

Related Tags :
Next Story