‘பிளைவுட்’ பலகையின் தரத்திற்கான குறிப்புகள்


‘பிளைவுட்’ பலகையின் தரத்திற்கான குறிப்புகள்
x
தினத்தந்தி 3 Feb 2018 4:00 AM IST (Updated: 2 Feb 2018 4:40 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக, கட்டுமானங்களில் கதவுகள் மற்றும் அவற்றிற்கான நிலைகள் போன்றவை மரங்கள் கொண்டு செய்யப்படுவது வழக்கம். அதற்காக சற்று விலை உயர்ந்த மர வகைகளும் பயன்படுத்துவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் குறிப்பிட்ட அளவு மரத்தின் பகுதிகள் விரயமாவதை தவிர்க்க இயலுவதில்லை.

ஒட்டு பலகைகள்

மேற்கண்ட பிரச்சினையை கணக்கில் கொண்டு, அவற்றை தவிர்க்கும் வகையில் மெல்லிய மரப்பலகைகள் ஒட்டப்பட்டு ‘பிளைவுட்’ வகைகள் தயாரிக்கப்பட்டன. அதாவது, மரங்கள் கச்சிதமாக அறுக்கும் இயந்திரங்கள் மூலம் மெல்லிய கனம் கொண்ட பலகைகளாக மாற்றப்படும். பிறகு அவை வெவ்வேறு அளவுகள் கொண்ட பலகைகளாக ஒட்டப்பட்டு ‘பாலீஷ்’ செய்து சந்தையில் கிடைக்கின்றன.

மரப்பலகை சுருங்கும்

பொதுவாக, மரப்பலகைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. ஆனால், மரத்துகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒட்டுப்பலகைகளுக்கு சுருங்கி விரியும் தன்மை இருப்பதில்லை. பிளைவுட் பலகைகள் 19–ம் நூற்றாண்டிலேயே நியூயார்க் நகரில் அறிமுகமாகி விட்டன. ‘ஹார்டு வுட்’, ‘டிராபிகல் வுட்’, ‘சாப்ட் வுட்’, ‘ஏர் கிராப்ட் பிளைவுட்’, ‘பிளக்சிபில் வுட்’ என்று பிளைவுட்டில் நிறைய வகைகள் உள்ளன.

பிளைவுட்டில் உள்ள தர வேறுபாடுகள்:

* A கிரேடு என்பது இரு பக்கங்களிலும் எவ்விதமான உட்புற துளைகளும் இல்லாத மரப்பலகைகளால் செய்யப்பட்டது.

* A/BB கிரேடு என்பது அவற்றின் பின் பக்கத்தில் முடிச்சுகள், சிறிய அளவிலான துளைகள் உள்ள மரப்பலகைகள் மூலம் தயாரிக்கப்பட்டது.

* B கிரேடு என்பது இரு பக்கங்களிலும் சிறிய அளவிலான துளைகளும், நிறம் சற்றே மங்கலாக இருக்கும்.

* B/BB, B, C/D ஆகிய குறியீடுகளில் இருந்தால் அவற்றின் தரம் சற்றே குறைவாக இருப்பதாக கருதலாம்.

* WG என்றால் அதில் உள்ள துளைகள் சரி செய்யப்பட்டதாகும்.

* X என்ற குறியீடு பிளைவுட்டில் உள்ள அனைத்து குறைகளும் அனுமதிக்கப்பட்டதாக கொள்ளப்படுகிறது.

Next Story