பழுதான தூண்களை சீரமைக்கும் புதிய தொழில்நுட்பம்
புதிய கட்டிடங்கள் அமைக்கும்போது எதிர்கால சூழலையும் கருத்தில்கொண்டு கட்டுமான பொறியாளர்கள் அவற்றை வடிவமைக்கிறார்கள்.
பல்வேறு இயற்கை மாற்றங்கள் கட்டுமானங்களை கணக்கிட்டதற்கும் மேலாக பாதிப்பை உண்டாக்கி விடுகின்றன.
கட்டிட பாதிப்புகள்
பொதுவாக, வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் குறைந்தபட்சம் 50 வருடங்கள் நிலைத்து நிற்கலாம் என்பது பொதுவான கணக்கு. ஆனால், இன்றைய சூழலில் கட்டி முடிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் பயன்பாட்டில் இருக்கும் கட்டிடங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிக்கலுக்கு விடை
குறிப்பாக, பழைய கட்டிடங்களின் தூண்களில் ஏற்படும் பாதிப்புகள் பெரிய சிக்கலாக மாறி வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டு வலுவை இழந்த தூண்களை வலுவானதாக மாற்ற இயலுமா..? என்ற கேள்விக்கு கட்டுமான வல்லுனர்கள் விடை கண்டுள்ளனர்.
‘ஜாக்கெட்டிங்’
அதாவது, சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் அறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த ‘ஜாக்கெட்டிங்’ என்ற வழிமுறை இப்போது நமது நாட்டிலும் உபயோகத்துக்கு வந்துள்ளது. இந்த முறையில் பாதிக்கப்பட்ட தூண்களின் மேற்பரப்பை லேசாக கொத்தி, சீர் செய்துவிட்டு, அதன் மேல் தகுந்த அளவிலான கம்பிகள் கட்டப்பட்டு, ‘சென்டரிங்’ தடுப்புகள் பொருத்தப்படும்.
வலிமையான தூண்கள்
அந்த தடுப்புகளுக்குள் கான்கிரீட் கலவையை கச்சிதமாக செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில நாட்கள் கழித்து அந்த தடுப்புகள் பிரிக்கப்படும். இந்த முறையின் மூலம் தூண்களின் வலிமை அதிகமாவதோடு, அவற்றின் எடையும் குறிப்பிட்ட அளவு கூடுதலாகிறது.
நீர்க்கசிவுக்கான ரசாயனம்
மேற்கண்ட ‘ஜாக்கெட்டிங்’ முறையில் பாதிக்கப்பட்ட தூண்களை வலுவாக மாற்றுவதற்கு முன்னர் அவற்றில் நீர்க்கசிவை தடுக்கும் ரசாயன கலவைகளை உட்செலுத்துவது பாதுகாப்பானது. இந்த தொழில்நுட்பமானது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பொறியாளர் ஆலோசனை
மேற்கண்ட முறையை பயன்படுத்துவது பற்றி கட்டிட பொறியாளர்களிடம் தக்க ஆலோசனைகளை பெறுவதோடு அவர்களது மேற்பார்வையில் செய்வது பலவகைகளிலும் பாதுகாப்பானதாக அமையும். மேலும், கட்டிடத்தின் இதர பகுதிகளும் வலுவாக இருக்கிறதா..? என்ற பரிசோதனையையும் அவர்கள் மூலம் செய்து கொள்வதும் நல்லது.

Related Tags :
Next Story