சுவர்களை பாதுகாக்கும் புதுவகை பெயிண்டு


சுவர்களை பாதுகாக்கும் புதுவகை பெயிண்டு
x
தினத்தந்தி 9 Feb 2018 9:30 PM GMT (Updated: 9 Feb 2018 5:30 PM GMT)

கட்டிட அமைப்புகளுக் கான பெயிண்டு வகைகள் பல விதங்களில் சந்தையில் கிடைக்கின்றன.

ட்டிட அமைப்புகளுக் கான பெயிண்டு வகைகள் பல விதங்களில் சந்தையில் கிடைக்கின்றன. நமது நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதுவிதமான விதமான நானோ பெயிண்டு வகையும் தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது. பசுமை கட்டிட பொருள்களின் வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ள இவற்றில் தண்ணீரை கலந்து எளிமையாக சுவர் உள்ளிட்ட இதர பரப்புகளில் பூச இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் போதுமானது


இந்த வகை பெயிண்டுடன் கலப்பதற்கு வேறுவிதமான ரசாயனப்பொருட்கள் ஏதும் வேண்டியதில்லை. பெயிண்டு அடிக்கும் சமயங்களிலும். அதன் பிறகும் மூக்கை துளைக்கும் வாசனையும் இவ்வகை பெயிண்டில் ஏற்படுவதில்லை. இதன் காரணமாக, பெயிண்டு பூசப்பட்டு, காய்ந்த உடனே வீடுகளில் குடிபுக முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

ரசாயனங்கள் இல்லை

உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் எவ்வித ரசாயனங்களும் இவ்வகை நானோ பெயிண்டில் இல்லை. அதனால், குழந்தைகள் அவர்கள் அறியாமல் பெயிண்டை தொட்டுவிட்டாலும் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டிற்குள் நிலவும் வெப்ப நிலையை அதிகரிக்க விடாமல் தடுத்து, வீட்டினுள் குளுமையான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது.

எளிதில் உதிராது

இவ்வகை பெயிண்டு சுவற்றில் பூசப்பட்ட பின்னர் எளிதாக உதிர்ந்து விடுவதில்லை. நீண்ட நேரம் தண்ணீரின் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்டாலும் அதன் நிறம் மங்கலாக மாறுவதில்லை. பெயிண்டு அடிப்பவர்களின் உடல் நலனை பாதிக்காத வகையில் உள்ளதாக இவ்வகை பெயிண்டு குறிப்பிடப்படுகிறது.

உள்நாட்டு தயாரிப்பு

மக்களுக்கு பாதிப்பு விளைவிக்காமலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும் ஒரு பெயிண்டு தயாரிப்பை உருவாக்கும் முயற்சியில் நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பெயிண்டு வகை இதுவாகும். எல்லா புதிய கண்டுபிடிப்புகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெயிண்டு வகை இது என்பது கூடுதல் செய்தி.

Next Story