வீடுகளின் மின் சாதனங்களை இயக்கும் தானியங்கி தொழில்நுட்பம்


வீடுகளின் மின் சாதனங்களை இயக்கும் தானியங்கி தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 9 Feb 2018 9:00 PM GMT (Updated: 9 Feb 2018 5:41 PM GMT)

பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக இயற்கை சக்திகளின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அனைத்து உலக நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக இயற்கை சக்திகளின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அனைத்து உலக நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, அதிகமாக பயன்படுத்தப்படும் இயற்கை சக்தியான மின்சாரத்தை சேமிக்க உலக நாடுகள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன.

மின் சேமிப்பு

பொதுவாக, மின்சார சாதனங்கள் மற்றும் மின்னணு வீட்டு உபயோகப்பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை சேமிக்கும் விதத்தில் பல்வேறு தயாரிப்புகள் சந்தையில் இருக்கின்றன.

மேல்நாட்டு தொழில்நுட்பம்


பெரும்பாலான வீடுகளில் வை-பை வசதி மற்றும் மொபைல் இன்டர்நெட் ஆகிய வசதிகள் சாதாரணமாக இருந்து வருகின்றன. அந்த வசதிகளின் மூலம் இயங்கக்கூடிய மின்சார சுவிட்சுகள் இப்போது நமது நாட்டில் அறிமுகமாகி இருக்கின்றன. இந்த தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகி பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு சாதனங்கள்

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பம் மூலம் வீட்டிலுள்ள மின்சார விளக்குகள், மின்விசிறிகள், ஜன்னல் திரைகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் எளிதாக இயக்க முடியும்.

செல்போன் போதுமானது

மேலும், அகச்சிவப்பு கதிர் மூலம் இயங்கும் மின் சாதனங்களான தொலைக்காட்சி பெட்டி, செட்-டாப் பாக்ஸ், ஆம்ப்ளிபையர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் கணினி ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும்.

எங்கிருந்தும் இயக்கலாம்

மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் இயக்க ‘வை-பை’ அல்லது மொபைல் போன் மூலம் செயல்படும் ‘ஹோம் இன்டலிஜென்ட் கேட்வே’ என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுகிறது. அதன் மூலம் எந்த ஒரு இடத்திலிருந்தும் வீட்டிலுள்ள அனைத்து மின் சாதனங்கள் அல்லது குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இயக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யலாம்.

இருட்டிலும் தெரியும்

சுவர்களில் பொருத்தப்பட்ட இவ்வகை ஸ்விட்சுகளில் ஒளிரும் மெல்லிய ஒளி காரணமாக இருட்டாக இருந்தாலும் அவற்றின் இருப்பிடத்தை காண இயலும். மேலும், வீட்டிலுள்ள ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு நேரங்களில் மின் விளக்குகளை ஒளிரும்படி செய்யும் ‘டைம் செட்டிங்’ அமைப்பும் அவற்றில் உள்ளது. குறிப்பாக, இவ்வகை ஸ்விட்சுகளை பொருத்த தனிப்பட்ட ‘ஒயரிங் அமைப்புகள்’ தேவையில்லை. அறைகளில் தற்போது உபயோகத்தில் உள்ள ஸ்விட்சுகளையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

Next Story