கட்டமைப்புகளில் குழாய்கள் பொருத்துவதற்கான குறிப்புகள்


கட்டமைப்புகளில் குழாய்கள் பொருத்துவதற்கான குறிப்புகள்
x
தினத்தந்தி 24 Feb 2018 7:12 AM GMT (Updated: 24 Feb 2018 7:12 AM GMT)

குழாய்கள் பதிக்கும் பணியின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

னி வீடுகள், அடுக்குமாடி வீடுகள், பண்ணை வீடுகள் என்று கட்டுமான அமைப்புகள் எதுவாக இருந்தாலும் ‘பிளம்பிங் ஒர்க்’ எனப்படும் குழாய்கள் பொருத்தும் பணி மிகவும் முக்கியம். தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் உள் வருகிறதோ, கிட்டத்தட்ட அதே அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு, கழிவு நீராக திரும்பி வரும்.

அதன் அடிப்படையில், குடிநீருக்கான குழாய்கள் போலவே, கழிவு நீர் வடிகால் குழாய்களும் தக்க அளவு கவனத்துடன் அமைக்கப்படவேண்டும் என்று பிளம்பிங் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு குழாய்கள் பதிக்கும் பணியின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி அவர்கள் தெரிவித்ததாவது:

* குறிப்பிட்ட கட்டமைப்பு அல்லது வீட்டின் சராசரியான தண்ணீர் நுகர்வு எத்தனை லிட்டராக இருக்கலாம் என்பதை கண்டறிந்து, அந்த அளவை விடவும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு தண்ணீர் வெளியேறும் வசதிகள் கொண்டதாக குழாய் வடிவமைப்புகளை செய்வது பாதுகாப்பானது.

* யு.பி.வி.சி, சிமெண்டு அல்லது இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்படும் நிலையில், திருப்பங்களில் பொருத்தப்படும் ‘எல்போ’ இணைப்புகளை ஒன்றுக்கொண்று அருகில் இருப்பதுபோல பயன்படுத்துவது கூடாது.

* ‘பிளம்பிங்’ அடிப்படைகளின்படி குழாய்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியமானது. பிறருடைய விருப்பங்களுக்கேற்ப பொருந்தாத அளவுகள் கொண்ட குழாய்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

* ‘பிளம்பிங்’ பணிகளில் ‘பேஸ்மட்டத்தை’ பொறுத்தவரை கழிவுநீர் குழாய்கள் வெளியில் தென்படாதவாறு மண்ணுக்குள் அமைக்கப்படும். அஸ்திவார பணிகளின்போதே மேற்கண்ட பணிகளை செய்வது பாதுகாப்பானது.

* கட்டுமான பணிகள் முடித்த பிறகு சில இடங்களில் பிரதான கவர்கள் அல்லது ‘பார்ட்டிஷன்’ சுவர்களை துளையிட வேண்டியதாக இருக்கும். இதனை தடுக்க முன்னரே சரியாக திட்டமிட்டு குழாய்களுக்கு தேவையான திறப்புகளை சுவர்களில் அமைத்து சிரமத்தை குறைக்கலாம்.

* பல குடியிருப்புகளில் குழாய்களில் நீர்க்கசிவு என்ற பிரச்சனை அடிக்கடி ஏற்படுவது வழக்கம். அதனால், பி.வி.சி குழாய்களை பொருத்தும்போது எவ்விதமான பாதிப்பு அல்லது சேதம் இல்லாமல் பொருத்த வேண்டும். குறிப்பாக, எதிர்காலத்தில் வரக்கூடிய பழுதுகளை சரி செய்ய வசதியாகவும் அவை இருக்கவேண்டும்.

* நான்கு அங்குலம் மற்றும் அதற்கும் மேற்பட்ட பி.வி.சி குழாய்களில் பழுது பார்க்க எளிதாக மறைகள் கொண்ட திறப்புகள் (Cl-e-a-n-i-ng Eye) அமைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, 30 அடிகளுக்கும் மேற்பட்ட நீளமான குழாயானது இணைப்புகள் கொண்டதாக பொருத்தும்போது நடுவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இது போன்ற திறப்புகள் அவசியம்.

* இன்றைய நிலையில் சிமெண்டு குழாய் பயன்பாடு நகர்ப்புறங்களில் ஆங்காங்கே இருந்து வருகிறது. மேல் மாடியிலிருந்து மழை நீரை வெளியேற்றவும், கழிவு நீரை வெளியேற்றவும் சிமெண்டு குழாய்கள் பயன்படுகின்றன. கூடுமானவரை மேல் மாடியிலிருந்து மழை நீர் மற்றும் இதர வகை கழிவு நீரை வெளியேற்ற பி.வி.சி குழாய்களே எளிதானது.

* சமையலறை மற்றும் குளியலறை பயன்பாட்டிற்கான இரும்பு குழாய்களை பொருத்தும் போது, துருப்பிடிக்காத தரம் கொண்டவற்றையே பொருத்த வேண்டும். அதற்கான வால்வுகளும் துருப்பிடிக்காத தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.

* கச்சிதமான ‘பிளம்பிங்’ பணியின் மூலம் வீடுகளில் நீர்க்கசிவு என்ற சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். குழாய்கள் மற்றும் வால்வுகள் உள்ளிட்ட பாகங்களை சரியாக பொருத்தும் பிளம்பிங் பணி பல பிரச்சினைகளை தவிர்க்கக்கூடியதாகும். 

Next Story