நவீன தொழில்நுட்பம் கொண்ட புதுவகை பூட்டு


நவீன தொழில்நுட்பம் கொண்ட  புதுவகை பூட்டு
x
தினத்தந்தி 2 March 2018 9:45 PM GMT (Updated: 2 March 2018 10:19 AM GMT)

ஸ்மார்ட் போன் வழியாக இருந்த இடத்திலிருந்தே வீட்டை பூட்டக்கூடிய தொழில்நுட்பத்தை நியூயார்க்கைச் சேர்ந்த நிறுவனம் புதிய கண்டுபிடித்துள்ளது. ‘பிரைடே லாக் சிஸ்டம்’ என்பது அதன் பெயர்.

ஸ்காண்டிநேவியன் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு ஸ்மார்ட் போனில் தனிப்பட்ட ஒரு அப்ளிகே‌ஷன் உள்ளது. அதை தரவிறக்கம் செய்து கொள்வதோடு, மற்றவர்களையும் இணைத்துக்கொள்ள முடியும்.  

குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் இந்த பூட்டை பயன்படுத்த முடியாது. உறவினர்கள் அல்லது நண்பர்கள் நாம் இல்லாத சமயங்களில் வீட்டுக்கு வரும் பட்சத்தில் அலுவலகத்தில் இருந்துகொண்டே ஸ்மார்ட் போன் மூலமாக கதவை திறந்து அவர்களை உள்ளே அனுமதிக்க முடியும்.

அவசரமாக வெளியில் செல்லும்போது வீட்டை பூட்ட மறந்து விட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. இருக்கும் இடத்திலிருந்து தானாகவே வீட்டை பூட்டிக்கொள்ளும்படி செய்ய முடியும்.

மேலும், கதவை திறப்பது யார் என்பதை போனிலிருந்து பார்க்க முடிவதோடு, பராமரிப்பு பணிக்காக ஆட்கள் வரும்பட்சத்தில் கதவைத் திறக்கலாம். இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்ட பூட்டு 6 செ.மீ விட்டம் கொண்டதாகும்.

Next Story