புதுமையான வடிவத்தில் கான்கிரீட் தள அமைப்பு


புதுமையான வடிவத்தில் கான்கிரீட்  தள அமைப்பு
x
தினத்தந்தி 3 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 4:14 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளின்போது கான்கிரீட் பயன்பாடு பல்வேறு விதங்களில் இருக்கும்.

மேல்தளம் அமைக்கும்போது அடிப்பகுதியில் தாங்கு குழாய்கள் அல்லது மூங்கில்களை நிறுத்தி, அவற்றின்மேல் பலகைகள் வரிசையாக இணைத்து அமைக்கப்பட்டு, கான்கிரீட் தளம் போடப்படும். அதன் பின் பலகைகளை நீக்கிவிட்டு ‘சீலிங்’ எனப்படும் கான்கிரீட் பரப்பில் மேல் பூச்சு பணிகள் மற்றும் அலங்கார வேலைகள் மேற்கொள்வது வழக்கம்.

அழகான தள அமைப்பு

மேற்கண்ட முறைக்கு மாற்றாக கான்கிரீட் இடும் பணிகளின்போதே தளத்தின் பரப்பை அலங்காரமாகவும், தக்க நேர்த்தியுடனும் அமைப்பதற்கு புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்கும் அந்த முறையின்படி, கான்கிரீட் தள அமைப்புகளில் பயன்படுத்தும் ‘பார்ம் ஒர்க்குகளில்’ புதுமையான ‘பார்ம் லைனர்கள்’ பயன்படுத்தப்படுகின்றன.

நவீன முறை

‘பார்ம் லைனர்கள்’ பயன்படுத்தி கான்கிரீட் பணிகளை செய்யும்போது, முட்டு பலகைகளை பிரித்த பிறகு செய்ய வேண்டிய பல வேலைகள் தவிர்க்கப்படுகின்றன. வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் மேற்கூரை அமைப்பின் வடிவம் மற்றும் தோற்றம் ஆகியவற்றை முன்னதாக நிறுவனத்திடம் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப ‘பார்ம் லைனர்கள்’ தயாரித்து அளிக்கிறார்கள். அதன் மூலம் கான்கிரீட் தளம் மற்றும் ஒரே மாதிரியான அலங்காரமான வடிவமைப்புகள் ஆகியவற்றை சுலபமாக செய்ய இயலும்.

பணிகளில் எளிமை

அதன் காரணமாக, மேற்கூரைகளை அழகுபடுத்தும் வேலைகளுக்காக தனிப்பட்ட பணிகளை செய்ய வேண்டியதில்லை. பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களில் பணிகளின் எளிமை கருதி இந்த முறையானது தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெருநகரங்களில் அமைக்கப்படும் விரைவு இரயில் போக்குவரத்திற்கான கட்டுமான பணிகளில் இம்முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

Next Story