மீன் தொட்டி அமைப்பில் வாஸ்து குறிப்புகள்

மீன் தொட்டி அமைப்பில் வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 10 March 2018 3:00 AM IST (Updated: 9 March 2018 4:23 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடியதாக வாஸ்து வல்லுனர்களால் குறிப்பிடப்படும் மீன் தொட்டி அமைப்பில் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்கள் குறித்து காண்போம்.

வீடுகளில் அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடியதாக வாஸ்து வல்லுனர்களால் குறிப்பிடப்படும் மீன் தொட்டி அமைப்பில் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்கள் குறித்து காண்போம்.

* மீன் தொட்டியை சமையலறை அல்லது படுக்கை அறையில் வைத்திருந்தால் பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்படும்.

* கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மீன் தொட்டியை வைத்தால் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு நிலவும்.

* தொட்டியில் குறைந்த பட்சம் 9 மீன்களும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

* நிறத்தை பொறுத்தவரையில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்கவேண்டும்.

* வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை கருப்பு மீன் ஈர்த்து கொள்ளும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. கருப்பு மீன் இறந்துவிடும்பட்சத்தில் அதே நிறத்தில் வேறொரு மீனை தொட்டியில் விடவேண்டும்.

Next Story