வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை
ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ (Balance Transfer) என்று சொல்லப்படுகிறது.
வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’
(Balance Transfer) என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.
மீதமுள்ள தொகை
வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும்.
கடன் தொகை சேமிப்பு
25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் என்பது கவனிக்கத்தக்கது.
நடைமுறை கட்டணங்கள்
மற்றொரு வங்கிக்கு கடன் மாற்றம் செய்யும் சமயங்களில் அந்த வங்கியில் பெறப்படும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், கடன் தொகை மாற்றம் செய்பவர் சம்பந்தப்பட்ட வங்கியின் புதிய வாடிக்கையாளராக கருதப்படுகிறார். வீட்டின் மதிப்பை அறிந்துகொள்ளும் கட்டணம், சொத்து குறித்து வழக்கறிஞர் கருத்துக்கான கட்டணம், முந்தைய வங்கியில் உள்ள அடமானத்தை ரத்து செய்து, மீண்டும் அதை பதிவு செய்யும் கட்டணம் ஆகியவை பற்றி அறிந்துகொள்வது நல்லது.
கடனுக்கான காலம்
முந்தைய வங்கியில் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்களுக்கு கிடைத்ததோ அதே கால அளவுக்குத்தான் புதிய வங்கி கடன் தொகையை கணக்கீடு செய்யும். அதாவது, 20 வருட காலத்தை கணக்கிட்டு கடன் பெற்று, 5 வருடங்கள் கடனை திருப்பி செலுத்திவிட்ட நிலையில், மீதியுள்ள 15 வருடங்களுக்கு மட்டும் கடன் தொகை கணக்கில் கொள்ளப்படும்.
வட்டி விகிதம்
பெரும்பாலும் வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சமயங்களில் பலரும் வேறொரு வங்கிக்கு கடனை மாற்றுகிறார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும் என்ற நிலையில், புதிய வங்கியின் வட்டி விகிதம் பற்றி முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
கூடுதல் கடன்
வங்கிக்கு கடனை மாற்றும் பெரும்பாலானவர்கள் கூடுதல் கடன் தொகையை மனதில் கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு பெறப்படும் கூடுதல் கடன் தொகைக்கு வரிச்சலுகை தரப்படுவதில்லை. மேலும், கூடுதல் கடன் தொகைக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் சமயங்களில் கடன் மாற்றம் செய்வது போதிய பயனை தராது. குறிப்பாக, புதிய வங்கியில் பெறப்படும் வீட்டுக் கடன் அதன் ‘அப்ரூவலில்’ இருந்தால், சில சலுகைகளுடன் கடன் பெறவும் வாய்ப்பு உண்டு.
ஆவணங்கள்
வீட்டுக்கடனை ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ செய்யும்போது, சில ஆவணங்களை அவசியமாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தரவேண்டியதாக இருக்கும். அத்தகைய அடிப்படை ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வீட்டுக்கடன் மாற்றம் செய்யும் முயற்சியை தவிர்ப்பது நல்லது.

Related Tags :
Next Story