அஸ்திவார பணிகளில் நீரால் ஏற்படும் சிக்கல்
சென்னையின் சில பகுதிகள் மற்றும் தமிழக அளவில் சில இடங்களில் கட்டுமான பணிகளுக்கான அஸ்திவாரம் எடுக்கும் சமயங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் ஒன்று நிலத்தடி நீர் சுரந்து கடைக்கால் குழிகளில் தேங்கி நிற்பதாகும்.

கட்டுமான பணிகளை செய்வதில் தண்ணீரின் பங்கு அத்தியாவசியம் என்ற நிலையில் அஸ்திவாரத்திற்கான குழிகளில் நீர் சுரந்து, தேங்கி நிற்பது கட்டுமான பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தும். இது போன்ற சூழலில் தடுப்பு நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அனுபவம் மிக்க கட்டுமான பொறியாளர்கள் வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்கள்.
அதாவது, அஸ்திவாரத்திற்கான குழிகளில் ஊறி வரக்கூடிய நிலத்தடி நீரை கட்டுப்படுத்துவதற்கு, கட்டிட பணிகள் நடக்கும் மனையின் ஒரு மூலைப்பகுதியில், கிட்டத்தட்ட 15 முதல் 20 அடி ஆழம் வரை குழி எடுக்க வேண்டும்.
அதில் 30 அங்குலம் அல்லது 36 அங்குல விட்டம் கொண்ட சில உறை கிணறு வளையத்தை இறக்கி, சரியாக ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். ஒரு உறைக்கும் இன்னொரு உறைக்கும் இடைவெளி அமையும்படி டைல்ஸ் துண்டுகளை வைக்கவேண்டும். இரு உறைகளுக்கு இடைவெளிகளில் நீர் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும். தொடர்ச்சியாக அந்த நீரை இறைத்து, வெளியேற்றிவிட்டு அஸ்திவார பணிகளை எளிதாக செய்து முடிக்கலாம்.

Related Tags :
Next Story