பழமையான மரத்தை பாதுகாக்கும் கட்டிட அமைப்பு
புகைப்படத்தில் பார்க்கும் கட்டிடம் துருக்கியில் உள்ள சருஹன் பே கலாசாரம், அறிவியல் மற்றும் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
கட்டிடத்தின் முன்புறத்தில் வளர்ந்துள்ள பைன் மரம் சுமார் 320 வருடங்களுக்கும் மேற்பட்ட வயது கொண்டது. அந்த மரம் வளர்ந்துள்ள பகுதியில் நிறுவனத்திற்கான கட்டிடத்தை அமைக்க வேண்டிய நிலையில், இயற்கையின் கொடையாக உள்ள அந்த மரத்தை பாதுகாக்கும் விதமாக கட்டுமான பொறியாளர்கள் கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர்.
அந்த மரத்தின் வளர்ச்சிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், கட்டிடத்தின் பால்கனிகள் வழியாக, மேற்கூரைக்கும் மேலாக மரம் வளர்ந்து செல்லும்படி அமைந்துள்ள கட்டிட அமைப்பு கவனிக்கத்தக்கது. நமது பகுதிகளிலும் இவ்விதமான கட்டிட அமைப்புகள் ஆங்காங்கே இருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Tags :
Next Story