பிளைவுட் பலகையில் ஒரு வகை


பிளைவுட் பலகையில் ஒரு வகை
x
தினத்தந்தி 31 March 2018 12:02 PM IST (Updated: 31 March 2018 12:02 PM IST)
t-max-icont-min-icon

பரவலான உபயோகத்தில் உள்ள பிளைவுட் வகைகளில் ‘சிப் போர்டு’ என்று சொல்லப்படும் மரத்துகள் பலகை (Particle Board) வகைகளும் ஒன்று.

மரப்பட்டறைகளில் மீதமாக தேங்கியுள்ள மரங்களின் துகள்களை பல்வேறு ரசாயனங்களை சேர்த்து இணைத்து உருவாக்கப்படுவது பார்ட்டிகள் பலகைகளாகும். இவற்றின் விலை பட்ஜெட்டுக்கு உகந்ததாக இருப்பதோடு, பலகைகள் சீரான வடிவமைப்பிலும் இருக்கும். ‘சிப்பிங்’ இயந்திரத்தில் மரத்தின் இதர பகுதிகள் மற்றும் அதன் மீதமான துண்டுகள் மற்றும் பட்டைகள் ஆகியவற்றை சீரான துகளாக மாற்றி இவ்வகை பலகைகளில் உபயோகப்படுத்துகிறார்கள்.

இவற்றின் தயாரிப்பின்போது ‘வாட்டர் ப்ரூப்’, ‘பயர் ப்ரூப்’ போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்காக சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படும். கோந்து மற்றும் இதர ரசாயனங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தில் பலகைகளாக மாற்றப்படுகின்றன. இவை தக்கை போன்று அதிகமான எடை இல்லாமல் இருப்பதால், மெல்லிய மரப்பலகைகளை ஒட்டி தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். பூச்சிகள் உள்ளிட்ட வண்டுகளின் தாக்குதல் இவற்றில் இருப்பதில்லை. ரெடிமேடு தக்கையால் செய்யப்பட்ட மர அலமாரிகள், கம்ப்யூட்டர் மேசைகள், பூஜை அறை, வரவேற்பறை அலமாரிகள், புத்தக அலமாரிகள் போன்றவை பட்ஜெட்டுக்குள் உட்பட்டும் கிடைக்கின்றன.

Next Story