ஆற்றின் நடுவில் ஓய்வு இல்லங்கள்


ஆற்றின் நடுவில் ஓய்வு இல்லங்கள்
x
தினத்தந்தி 31 March 2018 12:05 PM IST (Updated: 31 March 2018 12:05 PM IST)
t-max-icont-min-icon

கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எல்லையில் அமைந்துள்ள செயிண்ட் லாரன்ஸ் நதியில் இந்த ‘ஹப் ஐலண்டு’ அமைந்துள்ளது. இப்பகுதி ஒரு தீவுக்கூட்டமாக அமைந்துள்ளது.

 1800-க்கும் அதிகமான தீவுகள் கிட்டத்தட்ட 100 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் பரவலாக அமைந்துள்ளன. அவற்றில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கிட்டத்தட்ட நீர்மட்டத்தை விட சற்று உயரத்தில்தான் அமைந்துள்ளன.

இவற்றின் பெரும்பாலான தீவுகளில் மனிதர் வசிக்க உகந்ததாக இல்லாத நிலையில் நீர்ப்பறவைகள் வசிக்கின்றன. ஆனாலும், பல தீவுகளில் ஒற்றை வீடுகள் அல்லது பங்களாக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை விடுமுறைக்காலத்தில் தங்கி செல்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தீவுகளில் உள்ள ‘ஜார்ஜ் போல்ட்’ என்பவரது பங்களா பிரசித்தி பெற்றதாகும்.

சுற்றுலா பயணிகள் தவறாமல் புகைப்படங்களை எடுத்துச்செல்லும் வீடுகளில் அதுவும் ஒன்றாக உள்ளது. அனைத்து தீவுகளும் தண்ணீர் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு அடி உயரத்திற்கும் சற்று கூடுதலாக இருந்தாலும், அவற்றில் உள்ள பல தீவுகளில் சிறிய வகை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் 8 அடி அகலம் மற்றும் 10 அடி நீளம் கொண்ட தனி வீடுகளாக உள்ளன. மரங்களால் அமைக்கப்பட்டதால் ‘டெட் லோடு’ போன்ற சமாச்சாரங்களால் அஸ்திவார பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

Next Story