பனிமலையில் தனி வீடு


பனிமலையில் தனி வீடு
x
தினத்தந்தி 7 April 2018 4:45 AM IST (Updated: 6 April 2018 5:35 PM IST)
t-max-icont-min-icon

ஸ்விட்சர்லாந்து மலைப்பகுதியில் கிட்டத்தட்ட 13,000 அடி உயரத்தில் உள்ள சால்வே குடில் என்ற இந்த வீடு 1915–ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

வாலைஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கான்டன் பிராந்தியத்தின் ஜெர்மட் என்ற நகரத்தின் ‘ஸ்விஸ் அல்பைன் கிளப்’ என்ற பனிச்சறுக்கு விளையாட்டு குழுவினருக்கு இந்த வீடு சொந்தமானது. 

பனிச்சறுக்கு போட்டிகள் அல்லது விடுமுறைக்கால பொழுதுபோக்கு ஆகிய காரணங்களுக்காக பனி மலைகளின் மீது சறுக்கி விளையாட செல்பவர்களுக்கு எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். அது போன்ற அவசர காலங்களில் பாதுகாப்பாக தங்கி, ஓய்வெடுத்து செல்வதற்காக மலையின் வெளிப்புற விளிம்பில் கச்சிதமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் உட்புறத்தில் 10 படுக்கைகள் அமைந்துள்ளதோடு, வெளியுலக தொடர்பிற்காக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. சால்வே என்ற பெல்ஜியத்தை சேர்ந்த தொழிலதிபரால் அமைக்கப்பட்டதால் அவரது பெயராலேயே இந்த வீடு அழைக்கப்படுகிறது. முற்றிலும் மரங்களால் அமைக்கப்பட்டதோடு, மலையின் விளிம்பில் கச்சிதமான இடத்தில் இயற்கை பாதிப்புகளை தாங்கி நிற்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 
1 More update

Next Story