ஜன்னல் கண்ணாடிகளில் புதுமையான தொழில்நுட்பம்


ஜன்னல் கண்ணாடிகளில் புதுமையான தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 6 April 2018 11:45 PM GMT (Updated: 6 April 2018 12:13 PM GMT)

‘ஸ்மார்ட்’ ஜன்னல் என்பது வைபை (Wi-Fi) மூலம் இயங்கக்கூடியதாகவும், அதன் தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்து நிறம் மாறக்கூடிய தன்மை கொண்ட கண்ணாடி ஜன்னல்கள் ஆகும்.

ன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் வீட்டில் உள்ள ஜன்னலை திடீரென்று அகன்ற தொலைக்காட்சி திரையாக மாற்றும் அளவுக்கு முன்னேறிய சூழலில் இருக்கின்றன. இன்னும் கொஞ்ச காலத்தில் ஸ்மார்ட் ஜன்னல்கள் மூலம் அது சாத்தியமாகும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ‘ஸ்மார்ட்’ ஜன்னல் என்பது வைபை (Wi-Fi) மூலம் இயங்கக்கூடியதாகவும், அதன் தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்து நிறம் மாறக்கூடிய தன்மை கொண்ட கண்ணாடி ஜன்னல்கள் ஆகும்.

சென்சார்கள்

கண்ணாடியில் உள்ள உணரும் தன்மை கொண்ட சென்சார்கள், அறைக்குள் உள்ள பொருட்கள், ஆட்களின் எண்ணிக்கை, வெளியே நிலவும் வெப்பநிலை, சூரிய ஒளி ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ப கண்ணாடியின் நிறத்தை மாற்றிக்கொள்கிறது. அதனால், ஜன்னலை அடைக்கவோ அல்லது திரையால் மறைக்கவோ தேவையில்லை.

ஸ்மார்ட் கண்ணாடிகள்

இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் ஜன்னல் கண்ணாடிகள் சற்று கூடுதலான பட்ஜெட் கொண்டதாக இருக்கின்றன. சாதாரண ஜன்னலுக்கு ஆகும் பட்ஜெட்டை விடவும் 50 சதவிகிதம் அதிக செலவு பிடித்தாலும், மின் கட்டணத்தில் 20 சதவிகிதம் வரையிலும் சேமிக்க இயலும்.

‘டைனமிக் கிளாஸ்’

‘டைனமிக் கிளாஸ்’ கண்ணாடிகளின் நிறமாற்றத்தை ‘வைபை’ மூலம் கட்டுப்படுத்துவதோடு, செல்போனில் உள்ள அப்ளிகே‌ஷன்கள் மூலம் இயங்கக்கூடியது. கண்ணாடியின் அளவை பொறுத்து அதன் பட்ஜெட் இருக்கும்.

‘சொன்டே பிலிம்’ (Sonte Film)

உயர் தொழில் நுட்பம் கொண்ட டைனமிக் கண்ணாடி அனைவரது பட்ஜெட்டுக்கும் பொருந்துவதில்லை. அதன் அடிப்படையில் செலவு அதிகம் பிடிக்காத மின்னணுத் திரை போன்ற பிலிமை பயன்படுத்தலாம். ஏற்கெனவே, உள்ள வீட்டுக் கண்ணாடி ஜன்னலின் மீதும் இவற்றை ஒட்ட இயலும். ஒளிபுகும் தன்மையுள்ள கண்ணாடி ஜன்னலை, ஒளி ஊடுருவ முடியாத தன்மையுள்ளதாக மாறுகிறது.

ஸ்மார்ட் டிண்ட் பிலிம் 

ஜன்னல் கண்ணாடியில் ஒட்டக்கூடிய ஸ்மார்ட் திரையான ஸ்மார்ட் டிண்ட் பிலிம் எளிய பட்ஜெட் கொண்டது. இதில் ஒட்டும் தன்மையற்ற மற்றொரு வகை திரையும் (Sm-art Tint Non Ad-h-es-ive) உள்ளது. ஸ்மார்ட் டிண்ட் பிலிம் வகைகளை நேரடியாக ஜன்னல் கண்ணாடியின் மீது ஒட்டலாம். 

இன்விசிஷேடு அதிசிவ் பிலிம் 

இவ்வகை பிலிம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸை ஜன்னலில் உள்ள சுவிட்ச் அல்லது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம். பல வண்ணங்களில், வடிவங்களில் கிடைக்கும் இவற்றைக்கொண்டு ஜன்னலை மேலும் அழகுபடுத்துவதுடன், பிரத்தியேகமான தொழில்நுட்பம் மூலம் ஜன்னலின் மேற்புறத்தை மின்னணு திரையாக மாற்றலாம்.

இந்த ஒட்டும் திரையை வாங்குவதற்கு முன், அதன் மாதிரிகளை உபயோகித்து பார்த்து, பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. 

ஸ்மார்ட் கண்ணாடி அல்லது ஸ்மார்ட் திரை ஆகியவை வழக்கத்தை விட சற்று கூடுதலான பட்ஜெட்டில் இருந்தாலும் மின்சேமிப்பு என்ற கருத்தில் செலவாக எண்ணாமல், முதலீடாக பார்ப்பது நல்லது என்று உள்கட்டமைப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Next Story