மனையில் அஸ்திவார தூண்கள் அமைப்பு


மனையில் அஸ்திவார தூண்கள் அமைப்பு
x
தினத்தந்தி 7 April 2018 12:00 AM GMT (Updated: 6 April 2018 12:17 PM GMT)

அஸ்திவாரத்திற்கான ‘பில்லர்கள்’ அமையக்கூடிய இடங்களில் பள்ளங்கள், ‘செப்டிக் டாங்க்’ அல்லது கிணறு போன்றவை இடைஞ்சலாக அமைந்து விடலாம்.

நகரின் மையப்பகுதி அல்லது புறநகர் பகுதிகளில் வாங்கப்படும் வீட்டு மனை அல்லது பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய கட்டுமானங்கள் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன. 

அது போன்ற தருணங்களில், அஸ்திவாரத்திற்கான ‘பில்லர்கள்’ அமையக்கூடிய இடங்களில் பள்ளங்கள், ‘செப்டிக் டாங்க்’ அல்லது கிணறு போன்றவை இடைஞ்சலாக அமைந்து விடலாம். 

அத்தகைய பள்ளம் அல்லது ‘செப்டிக் டேங்க்’ போன்றவற்றை, கச்சிதமாக தூர்த்து, நன்றாக ‘பெட் கான்கிரீட்’ அமைத்து அஸ்திவார தூண்களை சுலபமாக கட்டமைக்க இயலும் என்று கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

மனையில் உள்ள பள்ளம் பெரியதாகவோ அல்லது பழைய கிணறாகவோ இருக்கும் பட்சத்தில் அதையும் சரியான முறையில் தூர்த்துவிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள தகுந்த பயிற்சியும், அனுபவமும் கொண்ட கட்டுமான பொறியாளர்கள் இருக்கிறார்கள். 

மேலும், சம்பந்தப்பட்ட மனையில் உள்ள பள்ளம், கிணறு அல்லது கழிவுநீர் தொட்டிகள் போன்றவை இருக்கும் பட்சத்தில் தக்க மண் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகளுக்கு ஏற்றவாறு கட்டுமான பொறியாளர்கள், ‘பூட்டிங்’ மற்றும் ‘பில்லர்’ ஆகியவற்றை அமைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். 

Next Story