பத்திரப்பதிவுக்கு பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்


பத்திரப்பதிவுக்கு பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்
x
தினத்தந்தி 7 April 2018 12:30 AM GMT (Updated: 6 April 2018 12:25 PM GMT)

வீடு அல்லது மனை வாங்கிய பின்பு அதற்கான ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவை முடிப்பதோடு வி‌ஷயம் முடிந்து விடுவதில்லை.

ட்ட ரீதியாக உள்ள ஆவணங்களில் சொத்து வரி குறிப்பேடுகளின் தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். வீடு வாங்குபவர்கள் சொத்து வரி ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வது முக்கியமானது.

சொத்து வரி பதிவேடு

நகராட்சி அலுவலகம் பராமரித்து வரும் சொத்து வரி (Pr-o-p-e-rty Tax)  பதிவேடுகளில் சொத்தின் புதிய உரிமையாளரது பெயரை பதிந்து, மாற்றம் செய்யப்படாவிட்டால், ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரில் வழங்கப்படும். வரி செலுத்தாத நிலையில் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. பெயர் மற்றும் முகவரி மாற்றம் சம்பந்தமாக நம்மிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:

1. கடைசியாக கட்டிய வரிக்கான ரசீது

2. விற்பனை பரிவர்த்தனை பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்

3. வீட்டு வசதி சங்கத்திடமிருந்து (Housing Society) வீடு வாங்கப்பட்டிருந்தால், அதனிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ் ( NOC)

4. கையொப்பம் இட்ட பூர்த்தி செய்த விண்ணப்பம்

விண்ணப்பம்

பரம்பரை சொத்து அல்லது புதியதாக வாங்கப்பட்ட சொத்து ஆகிய எதுவாக இருந்தாலும் சொத்து மீதான உரிமையை நிலைநாட்ட சொத்து வரிக்கான பெயர் மாற்றம் அவசியம். அதற்காக, நீதித்துறை முத்திரையோடு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை அந்த பகுதி தாசில்தாரிடம் அல்லது வருவாய் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, ஆட்சேபணை இல்லா சான்றிதழ் (NOC) முக்கியமானது. முந்தைய உரிமையாளர் காலமாகிவிட்டால் இறப்பு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். 

வீட்டு வரி

புதிய வீடுகள் அல்லது நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய், புன்செய் நில வரி அல்லது வீட்டு வரி) சரியாக செலுத்தப்பட்டு வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நிலத்திற்கு தீர்வை செலுத்தி வரும் மற்ற நபர்கள் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

பட்டா மாற்றம் 

கச்சிதமாக வரியை செலுத்தி வந்தாலும், அதற்கு தக்க பட்டாவும் வாங்கப்பட வேண்டும். மனை அல்லது நிலம் வாங்கிய பிறகு பட்டா மாற்றம் செய்வதோடு, அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html என்ற வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்வது முக்கியம். மாற்றம் ஏதாவது இருப்பின், உடனடியாக தக்க நடவடிக்கை அவசியம்.

ஒருவரது பெற்றோருக்கு பிறகு நிலம் அவரது பெயருக்கு மாற்றம் செய்யப்பட வேண்டுமானால், தக்க இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று, பட்டாவை சம்பந்தப்பட்டவர் பெயருக்கு மாற்றம் செய்யலாம். முக்கியமாக, மனைகளை வேலி அடைத்து பாதுகாப்பதுடன், அவற்றின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஓரிடத்தில் குறித்து வைத்துக்கொள்வதோடு, அந்த எண்களை குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து வைத்திருப்பதும்நல்லது.

Next Story