பேட்டரியில் இயங்கும் சுவர் துளையிடும் கருவி
கட்டுமான பணிகளின்போது துளையிடுவது, உடைப்பது, அறுப்பது போன்ற பணிகளுக்கு மின்சாரத்தால் இயங்கும் பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
துளையிடுவதற்காக ‘ஹேம்மர்’ என்ற கருவி உபயோகத்தில் உள்ளது. செங்கல் சுவர் அல்லது கான்கிரீட் அமைப்புகளில் துளையிட்டு அவற்றில் ஆணிகள் அல்லது ஸ்குரூ ஆகியவற்றை பொருத்தி தேவையான பொருட்களை சுவரில் அமைக்கப்படும் அல்லது மாட்டி வைக்கப்படும்.
ஒயர்களால் சிக்கல்
கைகளால் துளையிடும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் நிறைய வேலைகளை இக்கருவியைக்கொண்டு முடித்துவிடலாம். மின்சாரத்தால் இயங்கும் இத்தகைய கருவிகளை பயன்படுத்துவதில் உள்ள முக்கியமான சிக்கல், வேலை செய்ய வேண்டிய இடம் வரை மின் இணைப்புக்கான கேபிளையும் இழுத்துக் கொண்டு செல்லவேண்டியதாக இருக்கும். ஒரு சில நேரங்களில் கேபிள் ஒயர்கள் கால்களை தடுக்கி பணியாட்கள் அல்லது மற்ற நபர்கள் கீழே விழவோ அல்லது மின்சார அதிர்ச்சி ஏற்படவோ வாய்ப்புகள் உள்ளன.
‘கார்டுலெஸ் ஹேமர்’
மேற்கண்ட, சிக்கல்களை தவிர்ப்பதற்கு ‘கார்டுலெஸ்’ என்று சொல்லப்படும் ஒயர் இணைப்புகள் இல்லாத துளையிடும் சாதனங்களைப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ‘கார்டுலெஸ் ரோட்டரி ஹேமர்’ என்ற கருவி மூலம் பலவிதமான பணிகளைச் செய்யலாம். கான்கிரீட், கல், காரை என்று எதுவாக இருந்தாலும் கருவியை அவற்றின் மேல் இயக்கி துளையிடும் வேலையை எளிதாக செய்ய முடியும்.
ஒரு நிமிட தாக்கம்
இக்கருவி மூலம், அதிகபட்சமாக 20 மி.மீ (முக்கால் அங்குலம்) குறுக்களவு வரை அளவுகொண்ட துளைகளை இடலாம். இக்கருவியில் ஏற்படும் அதிர்வுகளின் ஒவ்வொரு தாக்கமும் 1.5 ஜூல் என்ற அளவில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 5000 தாக்கங்கள் என்ற வேகத்தில் இக்கருவி இயங்குகிறது.
பேட்டரி மூலம் இயக்கம்
இவ்வகை கார்டுலெஸ் ஹேமர் கருவியில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது, மின்சார இணைப்பு இல்லாமல் பேட்டரி மூலம் தொடர்ந்து கருவியை பயன்படுத்துவற்கான காலவரையறை உள்ளது. அதாவது, ‘சார்ஜ்’ செய்யப்பட்ட பேட்டரியின் சக்தி இருக்கும் வரை சில மணி நேரங்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும். பிறகு, மின்கலம் வலுவிழந்து விட்டால் ‘சார்ஜ்’ செய்தாக வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க ‘லித்தியம் அயான்’ வகை பேட்டரிகளை பயன்படுத்தி அதிகப்படியான காலத்துக்கு ‘ஹேமரை’ பயன்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது.
நீண்ட நேர உபயோகம்
வழக்கமான ‘நிக்கல் காட்மியம்’ பேட்டரிகள் கொண்ட கருவிகள் அதிக எடை கொண்டவையாக இருக்கும். ‘லித்தியம் அயான்’ வகையிலான கருவிகள் நீடித்து உழைப்பதோடு, எளிதாக பயன்படுத்தும் வகையில் எடை குறைவாகவும் இருக்கும். மேலும், மின்சாரத்தை இருப்பு வைத்துக் கொள்ளும் சக்தி ‘லித்தியம் அயான்’ பேட்டரிகளுக்கு அதிகமாக இருப்பதால், குறைந்த நேரம் சார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
‘ஸ்டீல் பிட்’ உறுதி
குறிப்பாக, பேட்டரியில் எவ்வளவு சக்தி இருப்பில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதோடு, தொடர்ந்து எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதையும் தீர்மானிக்கலாம். மேலும், ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் ‘சார்ஜ்’ செய்யலாம். துளையிடும் வேலைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய ‘ஸ்டீல் பிட்’ முனைகளில் வலுவான ‘கார்பைட்’ முனைகள் இருப்பதால் நீடித்து பயன்படுத்த முடியும்.

Related Tags :
Next Story