வீட்டு மனையை பாதுகாக்கும் சுற்றுச்சுவர் அமைப்பு
வீட்டு மனைகள் நகருக்குள் அமைந்திருந்தாலும், புறநகர் பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவற்றின் எல்லைகளை கச்சிதமாக வரையறை செய்து சுவர் எழுப்பி பாதுகாப்பு செய்து கொள்வது அவசியம்.
எல்லைகள் சரியாக வரையறுக்கப்பட்ட நிலையில், மனையை பாதுகாப்பதில் அதன் உரிமையாளர் கவனம் செலுத்துவது இன்றைய சூழலில் மிக அவசியம் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
எதிர்கால திட்டம்
குறிப்பிட்ட ஒரு மனையில், வீடு கட்டுவது எதிர்கால திட்டமாக உள்ள நிலையில், அதன் எல்லைக்குள் வெளியாட்கள் நுழைவதை தடுக்கவும், அருகில் உள்ள மற்றொரு மனையில் நடைபெறும் கட்டுமான பணிகளின்போது எதிர்பாராத அத்துமீறல்கள் ஏற்படாமல் தடுக்கவும், தகுந்த காம்பவுண்டு சுவர்கள் அமைத்து பாதுகாப்பு செய்து கொள்ளவேண்டும்.
ரெடிமேடு சுவர்கள்
மனையின் நான்கு எல்லைகளில் அடையாள கற்கள் நட்டு வைப்பதே போதுமானது. மேலும், அங்கே பாதுகாப்பாக சுற்றுச்சுவர் அமைத்து விட்டால், வீடு கட்டும் சமயங்களில் அதை இடிக்க வேண்டியதாகி விடலாம் என்றும் பலர் நினைக்கின்றனர். அதுபோன்ற சூழலில் சிக்கன பட்ஜெட்டில் ரெடிமேடு சுவர் அமைக்கலாம். காரணம், அவற்றை தேவையான சமயங்களில்
எளிதாக அகற்றி, மீண்டும் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள இயலும்.
சரியான கோணம்
காம்பவுண்டு சுவரும், வீட்டு சுவரும் எந்த இடத்திலும் தொடக்கூடாது. காம்பவுண்டு சுவர், ரெடிமேடு சுவர், கட்டிடத்தின் சுவர் ஆகியவற்றின் நான்கு மூலைகளும், 90 டிகிரி என்ற அளவில் இருப்பது சரியான முறையாகும்.
‘கார் ஷெட்’
‘கார் ஷெட்’ உள்ளிட்ட இதர ‘ஷெட்கள்’ அமைக்கப்படும்போது, காம்பவுண்டு சுவருக்கும், அதற்கும் உள்ள இடைவெளி சற்று அதிகமாக இருக்கவேண்டும். அந்த நிலையில் வீட்டின் பிரதான சுவரை தொடாமல் சற்று குறைந்த இடைவெளியில் கார் ஷெட் அமைக்கப்படுவது முறை.
‘கான்க்ரீட் ஸ்லாப்கள்’
குறிப்பாக, குறைவான பட்ஜெட்டில் காம்பவுண்டு சுவர் அமைக்க ரெடிமேடு ஸ்லாப் அமைப்புகளே பொருத்தமாக இருக்கும். கான்கிரீட் பில்லர்களை அமைத்து, அதற்கு மத்தியில் உள்ள இடைவெளிகளில் தகுந்த கான்கிரீட் ஸ்லாப்கள் கொண்டு தக்க உயரத்தில் மறைவாக அமைக்கப்படுகின்றன.
தனியாக உள்ள மனை
மேற்கண்ட ரெடிமேடு சுவரானது சுற்றிலும் நிறைய காலியிடங்கள் இருந்து, தனிப்பட்ட ஒரு மனையில் அமைக்கப்படுவது பாதுகாப்பான முறையல்ல என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, கால்நடைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு உள்ளிட்ட பல காரணங்களால் ‘ஸ்லாப்புகள்’ எளிதில் உடைந்து விடுவதாக அறியப்பட்டுள்ளது.
முள் வேலி
மேற்கண்ட அடிப்படையில் சுற்றிலும் காலியிடங்கள் சூழ அமைந்த மனைப்பகுதிகளுக்கு, கான்கிரீட் ‘ஸ்லாப்’ முறையில் சுவர்கள் அமைப்பதற்கு பதிலாக, முள் கம்பி வேலி மூலம் நாற்புறமும் தடுப்புகளை அமைத்து மனையை பாதுகாக்கலாம் என்றும் கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story