வீட்டு விரிவாக்கக் கடன் - வீடு மேம்பாட்டுக் கடன்
‘ஹோம் எக்ஸ்டென்ஷன் லோன்’ என்ற கடன் தொகை, தற்போதுள்ள சொந்த வீட்டை விரிவுபடுத்த அல்லது கூடுதலான கட்டமைப்புகளை அமைப்பதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் தரப்படுகிறது.
வீட்டு விரிவாக்கக் கடன்
‘ஹோம் எக்ஸ்டென்ஷன் லோன்’ என்ற கடன் தொகை, தற்போதுள்ள சொந்த வீட்டை விரிவுபடுத்த அல்லது கூடுதலான கட்டமைப்புகளை அமைப்பதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் தரப்படுகிறது. மேல்மாடிகள், புதிய அறைகள், பால்கனிகள் என்று அனைத்து விதமான கூடுதல் கட்டமைப்புகளுக்கும் இந்த கடனை பெற இயலும். நமக்கு சொந்தமான வீட்டில் அறைகளை கூடுதலாக கட்டுவதற்கு அல்லது மேல் மாடி கட்டுவதற்கு வங்கிகள் தரும் கடன்தான் இது. கட்டிய வீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளை அமைத்துக்கொள்ளவும் இந்த வகை கடன் வழங்கப்படுகிறது.
வீடு மேம்பாட்டுக் கடன்
‘ஹோம் இம்ப்ரூவ்மெண்டு லோன்’ என்ற கடன் தொகையானது வீட்டை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி வசதிகள் இல்லாத சூழலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் அளிக்கப்படுவதாகும். வீட்டுக்கு வர்ணம் அல்லது வெள்ளை அடிப்பது, கதவு மற்றும் ஜன்னல்களை மாற்றி அமைப்பது, ‘மாடுலர் கிச்சன்’ அமைப்பது புதிய மின்சார வசதி அல்லது ‘எலக்ரானிக்’ பொருட்கள் வாங்குவது, தண்ணீர் தொட்டி கட்டுவது ஆகிய பல்வேறு கட்டமைப்பு வேலைகளுக்காக இவ்வகை கடனை பெற்றுக்கொள்ளலாம். பிறகு வங்கி நடைமுறைகளுக்கேற்ப கடன் தொகையை திருப்பி செலுத்தி வரலாம்.
Related Tags :
Next Story