சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை


சமையலறை   அமைப்பில்    நவீன  அணுகுமுறை
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 4:46 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய நாகரிக உலகில் ‘மாடுலர் கிச்சன்’ எனப்படும் நவீன சமையலறை அமைப்பது வழக்கத்தில் உள்ளது. வீட்டில் உள்ள சமையலறை அளவிற்கேற்ப நீளஅகலங்களில் மாடுலர் கிச்சன் வசதிகள் சந்தையில் கிடைக்கின்றன.

ன்றைய நாகரிக உலகில் ‘மாடுலர் கிச்சன்’ எனப்படும் நவீன சமையலறை அமைப்பது வழக்கத்தில் உள்ளது. வீட்டில் உள்ள சமையலறை அளவிற்கேற்ப நீளஅகலங்களில் மாடுலர் கிச்சன் வசதிகள் சந்தையில் கிடைக்கின்றன. குடியிருப்புகள் அல்லது வீடுகளின் சமையலறை என்பது ஆரோக்கியம் தொடங்கும் இடமாக சொல்லப்படுகிறது. இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சமையலறையை திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைக்கும் பட்சத்தில் கிடைக்கும் கூடுதல் இடத்தை வீட்டின் பிற பகுதிகளில் சேர்த்துக் கொள்ள இயலும் என்றும் அறியப்பட்டுள்ளது.

முக்கோண அமைப்பு

பொதுவாக, சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, மற்றும் குளிர் சாதன பெட்டி ஆகிய மூன்று பொருட்களையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. காரணம், அந்த மூன்றும் ‘Work Triangle’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சுலபமாக பயன்படுத்தும் வகையில் சமையலறை அமைப்பது இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமையலறையின் அமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சமையலறை கீழ்க்கண்ட ஆறு வகைகளாக குறிப்பிடப்படுகிறது. அவை: 

1) U வடிவம்,  2) L வடிவம், 3) G வடிவம், 4) ஒற்றை சுவர் சமையலறை (Single wall 
kitchen
),  5) தாழ்வான சமையலறை (galley kitchen) 6) தனிப்பட்ட அமைப்பு (island feature) என்பனவாகும். 

‘வொர்க் டிரைஆங்கிள்’

(work triangle)
என்று சொல்லப்படும் மூன்று வி‌ஷயங்களையும் சுலபமாக பயன்படுத்தும்படி அமைப்பதோடு, இடைவெளிகளில் நடப்பதற்கு போதிய இடமும் இருக்க வேண்டும். பொதுவாக, சமையலறை ‘சிங்க்’ அமைப்பு அறையின் ஒரு கார்னர் பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். குளிர் சாதனப்பெட்டி திறந்து மூடுவதற்கு வசதியான நிலையிலும், இடையூறு இல்லாத இடத்திலும் அமைக்க வேண்டும். 

அழகிய தோற்றம்

எவ்வகை சமையலறையாக இருப்பினும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியமானது. மேலும், அலங்கார அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புகள் ஆகிய காரணங்களின் மூலமும் சமையலறை அழகாக தோற்றமளிக்கிறது. தற்போது, ‘மைக்ரோவேவ் ஓவன்’ மற்றும் ‘டிஷ் வா‌ஷர்’ போன்ற உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளதை கவனத்தில் கொண்டு, அவற்றிற்காக தக்க இடம் அமையுமாறு சமையலறையை வடிவமைக்க வேண்டும்.                  

புகை போக்கி

சமையலறையில் நல்ல காற்றோட்டம் மற்றும் புகை மற்றும் தூசி ஆகியவை சரியாக வெளியேறும் வண்ணம் வெளியேற்றும் விசிறி (exhaust fan) அமைப்பும் இருக்கவேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் அடுப்பெரிக்க விறகை பயன்படுத்தியபோது, புகைபோக்கி பொருத்தப்பட்டது. இன்றைய உலகில் அந்த இடத்தை ‘எலெக்ட்ரிக் சிம்னி’ பிடித்து விட்டது. கிருமிகளைக் கொல்லும் திறன் சூரிய ஒளிக்கு உண்டு என்பதால் கிருமி நாசினியான சூரிய ஒளி சமையலறையில் நன்றாக படியும்படி ஜன்னல்களை அமைக்கவேண்டும்.

சமையல் மேடை

சமையல் செய்வது, சமைத்த பொருட்களை கச்சிதமாக அடுக்குவது, பாத்திரங்களை சிங்க்–ல் சுத்தம் செய்வது ஆகிய பணிகளுக்கேற்ப சமையல் மேடை அமைக்கப்பட வேண்டும். கிரானைட், கடப்பா, மார்பிள், டைல்கள், மரம், இரும்பு என்று பட்ஜெட்டிற்கேற்ப தேர்ந்தெடுக்கப்படும் மேடையை, பயன்படுத்த எளிமை, நீண்ட கால உழைப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு தேர்ந்தெடுப்பது உகந்தது. 

சமையலறை ‘கேபினெட்’

சமைப்பதற்கான பொருட்கள், பரிமாறுவதற்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வைத்துக்கொள்ள சமையலறையில் கேபினட் மற்றும் ஷெல்ப் ஆகியவற்றை மேடையின் கீழே அமைத்துக்கொள்ளலாம். குறிப்பாக, சமையலறை தரைத்தளம் மற்றும் வண்ணம் ஆகியவற்றை வீட்டின் பிற பகுதிகளின் வடிவமைப்பிற்கேற்ப தேர்வு செய்யலாம். சமையலறையின் ஒரு பகுதியில் சாப்பிடும் மேஜை அமைத்து அங்கே உணவு உண்ணும் வகையில் அறையை சற்றே அகலமாகவும் அமைப்பது உண்டு.

Next Story