தரைத்தள பராமரிப்பை எளிதாக்கும் ரசாயனங்கள்


தரைத்தள பராமரிப்பை எளிதாக்கும்  ரசாயனங்கள்
x
தினத்தந்தி 28 April 2018 4:30 AM IST (Updated: 27 April 2018 4:16 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக, தரைத்தள அமைப்பு மற்றும் சுவர்ப்பரப்பு ஆகியவற்றில் ‘டைல்ஸ்’ அல்லது ‘மார்பிள்’ பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக, தரைத்தள அமைப்பு மற்றும் சுவர்ப்பரப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ‘டைல்ஸ்’ அல்லது ‘மார்பிள்’ வகை எதுவாக இருந்தாலும், அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்து பதிக்கும்போது, அவற்றுக்கிடையில் சிறிய இடைவெளி உண்டாவதை தவிர்க்க இயலாது. அந்த இடைவெளிகள் நாளடைவில் அழுக்கு படிந்து அழகற்ற தோற்றத்துடன் காட்சி தரும். அவற்றை சுத்தப்படுத்த ரசயான மருந்துகளை உபயோகம் செய்ய வேண்டியதாக இருக்கும்.

இரண்டு ‘டைல்ஸ்களுக்கு’ மத்தியில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப விசே‌ஷமான ‘பில்லர் மெட்டீரியல்’ வகைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் ‘சிங்கிள் காம்போனன்ட் டைல் ஜாயிண்ட் பில்லர்’, ‘த்ரீ காம்போனன்ட் டைல் ஜாயிண்ட் பில்லர்’ மற்றும் ‘பாஸ்ட் செட்டிங் டைல் மோர்ட்டர்’ ஆகிய பல்வேறு வகைகள் தற்போது கிடைக்கின்றன. தரைத்தள அமைப்பில் அவற்றை பயன்படுத்தும்போது, டைல்ஸ்–களுக்கு மத்தியில் உண்டாகும் இடைவெளிகள் மறைந்து விடுவதோடு, ரசாயன பொருட்களை பயன்படுத்தி தரைகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் எற்படுவதில்லை.

Next Story