கட்டுமான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
கட்டுமானத்துறையில் தற்போது அறிமுகமாகும் தொழில்நுட்பங்கள், பணிகளை விரைவாக செய்து முடிக்க உதவி செய்யும்படி அமைய வேண்டுவது அவசியம் என்ற நிலை எற்பட்டுள்ளது.
பெரிய அளவிலான அடுக்குமாடி வீடுகள், பிரமாண்டமான வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டமைக்க மனித வளம் அதிக அளவில் தேவைப்படும் சூழலில் சிக்கலான பணிகளை முடிக்க ரோபோ வகைகள் அறிமுகமாயின.
அஸ்திவார பணிகள்
உயரமான கட்டமைப்புகளை அமைக்கும்போது முதல் கட்ட பணியாக ஆழமான அஸ்திவாரங்களை எடுக்க வேண்டும். அதற்கு நிலத்தைப் பெரிய அளவில் தோண்டும் பணிகளுக்கு அதிகமான நாட்களும், மனித உழைப்பும் தேவைப்படும். வெளிநாடுகளில் பள்ளம் தோண்டுவதற்காகத்தான் முதன்முதலில் ‘ரோபோக்கள்’ பயன்படுத்தப்பட்ட நிலையில் அவை இதர கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டன. தற்போதைய விரைவான வாழ்க்கை முறைகளில், கட்டுமானப் பணிகளை சரியாக செய்ய ரோபோக்கள் தவிர, செயற்கை நுண்ணறிவு கொண்ட கட்டுப்பாட்டு சாதனங்களின் தேவை அவசியம் என்ற நிலையில் அவை மேலை நாடுகளில் அறிமுகமாகி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு
கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் ஆங்காங்கே உள்ள மூலை முடுக்குகளில் சி.சி.டி.வி காமிராக்கள் மற்றும் புகை உணரும் கருவிகள் பொருத்தப்பட்டு, ஸ்பீக்கர்கள் வழியே உத்தரவுகள் அளிக்கப்படும். மேலும், மைக்குகள் மூலம் பணியிடங்களில் எழும் சத்தங்களை உள்வாங்கி கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய புதுமை தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற முறை அறிமுகமாகி இருக்கிறது. அதாவது, கருவியுடன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா ஆட்கள் நடமாட்டம் உள்ளிட்ட விதிமீறும் பணிகளை துவக்கத்திலேயே கண்டுபிடித்து ஒலி பெருக்கிகளின் வழியே தானியங்கி அமைப்பு மூலம் தக்க உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
* பணியிடத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வெல்டிங் மிஷின், வைப்ரேட்டர், எலக்ட்ரிகல் பொருட்கள் ஆகியவை பாதுகாப்பு விதிகள்படி இருக்கக்கூடாது என முன்னதாக பதிவு செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு அவை எடுத்துச்செல்லப்படும்போது, அவை கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, நினைவகத்தோடு தொடர்பு கொண்டு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும்.
* கட்டுமானப் பணிகளின் அனைத்து நிலைகளையும், அவற்றின் வழிமுறைகளையும் கண்காணிப்பதோடு, குறிப்பிட்ட பகுதியில் கான்கிரீட் வார்த்த பிறகு நீராற்றுதல் பணிகள் நடக்காவிட்டால், அதனுடன் இணைக்கப்பட்ட வெப்பநிலைமானிகள், குளிர்ச்சியான நிலையை உணர்ந்து ‘கியூரிங்’ பணிகள் செய்யப்பட்டுள்ளதா..? இல்லையா..? என்பதை புரிந்துகொண்டு தகவல் அளிக்கிறது.
* புகை, தீப்பிடித்தல் போன்ற இக்கட்டான சமயங்களில் வெளிப்படும் வெப்ப நிலையை உணர்ந்து (டெம்பரேச்சர் இன்டிகேட்டர்) பணியிடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி கண்ட்ரோல் ரூமுக்கு உடனடியாக செய்தி அனுப்பும்.
* கட்டுமானப் பணியிடங்களில் வெளியாட்கள் நடமாடினால் சிஸ்டம் உடனுக்குடன் சுட்டிக்காட்டும். பணியிடத்தில் உள்ளே நுழையும் வெளி ஆட்கள் முன்கூட்டியே செக்யூரிட்டியில் முறையான பதிவினை செய்து கொள்ளவேண்டும். பணியாளர்களின் கண்கள் ஸ்கேனிங் செய்யப்பட்டு, கருவியின் நினைவகங்களில் சேமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் பணியாளர்களை பணியாற்ற அனுமதிக்கும். அதன் அடிப்படையில் மூன்றாம் தளத்தில் பணியாற்றுபவர், முறையான பணி அனுமதி இல்லாமல் இரண்டாம் தளத்திற்கு வந்தால் அங்கு உள்ள ஒலிபெருக்கி சம்பந்தப்பட்டவரின் பெயரை குறிப்பிட்டு கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் அனுப்பும்.
* பணியாளர்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கத் தவறினாலும் உடனடியாக ஒவ்வொருவருக்கும் தகவல் ஸ்பீக்கரில் தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட பணி இடத்தில் கையுறை, காலணி, கண்ணாடி, தலைக்கவசம் போன்றவற்றை பணியாளர்கள் அணிந்திருக்க வேண்டியது அவசியம் என பதிவு செய்து விட்டால், பணியின்போது குறிப்பிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணியாததை பதிவு செய்து கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் அனுப்பும்.
* மேற்கண்டவை தவிர, பல்வேறு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியதாகவும் இந்த தொழில்நுட்பம் உலக நாடுகளில் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது.
இந்தியாவில் இது போன்ற செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் இல்லாத நிலையில் சர்வதேச நிறுவனங்கள் மேற்கண்ட அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இவை 2019–ம் ஆண்டு வாக்கில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிக வளாகங்கள் உள்ளிட்ட உயரமான கட்டுமானங்கள் ஆகியவற்றின் பணிகளை பாதுகாப்பாக செய்து முடிக்க ஏற்ற தொழில்நுட்பமாக இந்த முறை கவனிக்கப்படுகிறது.

Related Tags :
Next Story