நீரால் பாதிக்கப்படாத ‘பிளைவுட்’ வகை
தண்ணீரில் இருந்தாலும் கப்பலுக்கு ஒன்றும் ஆகாது என்ற சொல் வழக்கை நினைவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்படும் ஒட்டுப்பலகைகளில் ஒன்றுதான் மரைன் பிளைவுட் ஆகும்.
தண்ணீரில் இருந்தாலும் கப்பலுக்கு ஒன்றும் ஆகாது என்ற சொல் வழக்கை நினைவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்படும் ஒட்டுப்பலகைகளில் ஒன்றுதான் மரைன் பிளைவுட் (Marine plywood) ஆகும். இவ்வகை பலகைகள் இரண்டு விதங்களில் இருக்கின்றன. முதலாவது, அலமாரிகள், பெட்டிகள் போன்றவற்றை செய்ய பயன்படுவது. இரண்டாவது ‘ஷட்டர்ஸ்’ எனப்படும் கதவுகள் செய்ய பயன்படுகிறது. அலங்காரமான டிசைன்கள் தேவைப்படும் கதவு அமைப்புகளுக்கு உட்புறத்தில் உறுதியான மரத்தால் ஆன உள்ளீடு இருப்பது அவசியம் என்ற நிலையில் இவ்வகை மரம் அதற்கு ஏற்றதாக உள்ளது. பொதுவாக, மரைன் பிளைவுட் வகைகள் பூஞ்சைகளால் தாக்கப்படாத தன்மை கொண்டதாகும். அதே சமயம் ஈரத்தன்மையை தாங்கும் சக்தி கூடுதலாக உண்டு. பிளைவுட் பலகையில் இவ்வகை சற்று கூடுதலான செலவு கொண்டது.
Related Tags :
Next Story