எம்–சாண்ட் தரம் குறித்த பரிசோதனைகள்
எம்– சாண்ட் உற்பத்தியை அதிகரிக்கவும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கட்டுமான தேவைகளுக்கான மணலை இறக்குமதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எம்– சாண்ட் உற்பத்தியை அதிகரிக்கவும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கட்டுமான தேவைகளுக்கான மணலை இறக்குமதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அளவில் இயங்கி வருகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தரமான எம்–சாண்ட் தயாரிப்பதை உறுதி செய்ய, மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு சென்று தரப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சென்னை தலைமையிட பொறியாளரும் எம்–சாண்ட் தரம் பற்றி பரிசோதனைகள் மேற்கொள்வதும் வழக்கம். பின்னர், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டுமானங்கள்), சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் உள்ளிட்ட 24 பேர்கள் கொண்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் குழுவின் சிறப்பு கூட்டத்தில் எம்–சாண்ட் ஆலைகளுக்கான அரசின் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story