உங்கள் முகவரி

சுவர்கள் கட்டமைப்பில் எளிய முறை + "||" + Simple method on walls structure

சுவர்கள் கட்டமைப்பில் எளிய முறை

சுவர்கள் கட்டமைப்பில் எளிய முறை
சுவர்களை விரைவாக கட்டமைத்து அழகாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள நிறைய வழிமுறைகள் இருக்கின்றன.
 ‘பிரிகாஸ்ட்’ எனப்படும் ரெடிமேடு சுவர்கள் அமைப்பு முறையும்  அவற்றில் ஒன்றாகும். இந்த முறை கட்டமைப்புகளை எளிதாகவும், அழகாகவும் அமைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, பராமரிப்பு, ஒலி கட்டுப்பாடு, வெப்ப கட்டுப்பாடு போன்ற வெவ்வேறு தேவைகளையும் நிறைவேற்ற பொருத்தமாக இருக்கும் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார் கள்.


சுவர் பரப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்..? எத்தகைய தோற்றம் வேண்டும்..? என்னென்ன பாதுகாப்பு முறைகள் தேவை..? என்ற விஷயங்களை முன்கூட்டியே முடிவு செய்து ‘பிரிகாஸ்ட் கான்கிரீட்’ மூலம் ‘வால் கிளாடிங்’ பணிகளை செய்து, சுவர்களின் அழகை அதிகரிக்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.

எண்ணத்திற்கேற்ப கட்டமைக்க இயலும் என்ற நிலையில் கட்டிடத்தின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது பற்றி சந்தேகம் வேண்டியதில்லை என்றும் ‘பிரிகாஸ்ட்’ தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனித்தன்மையுடன் தயாரிக்கப்படுவதால் வழக்கமான தாய்ச் சுவர்களுக்கும்கூட ‘பிரிகாஸ்ட்’ அமைப்புகள் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘பிரிகாஸ்ட்’ முறையில் மொத்த வீட்டையும் கட்டமைக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. சொத்துக்களின் உரிமையை குறிப்பிடும் சொத்து வரி ரசீது
சொத்து வரி செலுத்தப்படாத நிலைகளில் நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கான இணைப்பு உள்ளிட்ட சில சேவைகளை வழங்க மறுக்கலாம்.
2. புதுமையான கான்கிரீட் கலவை இயந்திரம்
வழக்கமாக நாம் பார்க்கும் கான்கிரீட் கலக்கும் இயந்திரத்தில் தேவையான சிமெண்டு, மணல், ஜல்லி, தண்ணீர் ஆகியவற்றை தக்க அளவுகளில் போட்டு, இயக்கி தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவை தரையில் ஒரு ‘பிளாஸ்டிக் ஷீட்’ விரித்து கொட்டப்படும்.
3. ஆர்க்கிடெக்ட் மற்றும் கான்ட்ராக்டர் தேர்வு
கட்டமைப்புகளை அமைக்க முடிவெடுக்கும் போது கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கலந்து ஆலோசிப்பது முக்கியமானது.
4. வாஸ்து மூலை : அறை சுவர்களில் படங்கள்
* வீட்டின் நுழைவாசல் சுவரில் விநாயகர் படம் அல்லது நிலைக்கண்ணாடி ஆகியவற்றை மாட்டி வைக்கலாம்.
5. கட்டமைப்புகளுக்குள் குளிர்ச்சி தரும் நவீன கட்டுமான அணுகுமுறை
இயற்கையான முறையில் வீடுகளுக்குள் வெப்பம் மற்றும் குளிர் போன்ற பாதிப்புகள் இல்லாத வகையில், உலக அளவில் பல்வேறு புதிய யுக்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.