பாகப்பிரிவினை சொத்துக்கு உட்பிரிவு பட்டா அவசியம்


பாகப்பிரிவினை  சொத்துக்கு  உட்பிரிவு  பட்டா  அவசியம்
x
தினத்தந்தி 18 May 2018 10:00 PM GMT (Updated: 18 May 2018 11:10 AM GMT)

குடும்ப பாகப்பிரிவினை மூலம் ஒருவருக்கு கிடைத்த வீடு அல்லது மனையை வாங்கும்போது அதற்குரிய பட்டா வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் கொள்வது அவசியம்.

குடும்ப பாகப்பிரிவினை மூலம் ஒருவருக்கு கிடைத்த வீடு அல்லது மனையை வாங்கும்போது அதற்குரிய பட்டா வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் கொள்வது அவசியம். அதாவது, அந்த சொத்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா..? என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதியதாக சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குபவர் அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்வது எளிதாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பழைய பட்டா

பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில்தான் பழைய பட்டா இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடலாம். 

கால தாமதம் கூடாது

அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா வி‌ஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான வி‌ஷயமாக அமையும். 

உட்பிரிவு பட்டா

எனவே, பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போதுதான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாக இருக்கும்.

Next Story