தானாக ‘ செட்’ ஆகும் புதுவகை கான்கிரீட்


தானாக ‘ செட்’  ஆகும் புதுவகை கான்கிரீட்
x
தினத்தந்தி 18 May 2018 9:15 PM GMT (Updated: 18 May 2018 11:14 AM GMT)

கட்டுமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் பணிகளை விரைவாக முடிப்பது ஆகிய காரணங்களை முன்னிறுத்தி ஜப்பானியர்களால் 35 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் தானமைவு கான்கிரீட் ஆகும்.

ட்டுமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் பணிகளை விரைவாக முடிப்பது ஆகிய காரணங்களை முன்னிறுத்தி ஜப்பானியர்களால் 35 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் தானமைவு கான்கிரீட் (Self Consolitated Concrete
) ஆகும். கட்டுமான பணிகளில் ‘சென்டரிங்’ அமைப்புகளுக்குள் கான்கிரீட் ஒரே சீராக பரவச்செய்வதற்காக கம்பிகளால் குத்துவது, அல்லது ‘வைப்ரேட்டர்கள்’ கொண்டு இறுகச்செய்வது போன்ற பணிகள் இந்த கான்கிரீட் வகையில் தேவைப்படுவதில்லை. 

வேலையாட்களின் மூலம் கான்கிரீட்டை பரவச்செய்யும் முறைகளை பயன்படுத்தாமல் தானாக பரவுவதற்காக வேதிப்பொருட்கள் உள்ளிட்ட மற்ற சேர்மானங்களை கான்கிரீட்டில் கலந்து பயன்படுத்தப்படுகிறது. கலவையில் பிசுபிசுப்பு தன்மையை போதுமான அளவு நிறுத்திக் கொள்ள ‘பாலி கார்பாக்சிலேட் பாலிமர்’ உள்ளிட்ட ரசாயனங்கள் கலக்கப்பட்டு எஸ்.சி.சி எனப்படும் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’ தயாரிக்கப்படுகிறது. 

தண்ணீர் கசிவு ஏற்படுவது, கலவை காய்ந்த பின்னர் உதிர்வது, காற்றுக்குமிழ்கள் ஏற்படுவது போன்ற வழக்கமான பிரச்சினைகள் இதில் ஏற்படுவதில்லை. அதன் காரணமாக பணிகள் எளிதாக முடிந்து விடுவதோடு. குறைவான வேலையாட்களே தேவைப்படுவதால் பட்ஜெட் கட்டுக்குள் வருகிறது. குறிப்பாக, இந்த கான்கிரீட்டை எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் ‘பம்ப்’ செய்ய முடிவதோடு, கான்கிரீட் ‘வைப்ரேட்டர்கள்’ பயன்பாடும் தேவைப்படுவதில்லை.

Next Story