கண்கவரும் கான்கிரீட் வளைவு கூரை வடிவமைப்பு
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டுமான அமைப்புகளில் கூரை என்பது கான்கிரீட் அல்லது பல்வேறு டைல்ஸ் வகைகள் ஆகியவற்றால் அமைக்கப்படுவது வழக்கம்.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டுமான அமைப்புகளில் கூரை என்பது கான்கிரீட் அல்லது பல்வேறு டைல்ஸ் வகைகள் ஆகியவற்றால் அமைக்கப்படுவது வழக்கம். பொதுவாக, உட்புற கூரைக்கு கீழ்ப்பகுதிகளில் ‘பால்ஸ் சீலிங்’ அமைக்கப்படுவது தவிர, அவரவர் விருப்பத்திற்கேற்ப கூரையின் அமைப்பை வளைவு அல்லது அரைவட்ட வடிவத்தில் அமைப்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
வளைவு கட்டமைப்பு
வராந்தா அல்லது நடைபாதைக்கான பகுதிகளில் கான்கிரீட் வளைவு கூரை வடிவமைப்புகளை அழகுக்காக செய்வது வழக்கம். வளைந்த கட்டமைப்புகளை கூரையில் கட்டப்படும் நிலையில் அவற்றை ‘சென்டரிங்’ பணிகளின்போதே முடிவு செய்து கொள்வது அவசியம்.
முன்கூட்டியே தயாரிப்பு
மேற்கண்ட, உள்கூரை அழகுபடுத்தும் பணிகளை பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு செய்து முடிக்க ‘ஆர்ச் பேனல் ரூப்’ (Arch Panel Roof) என்ற தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, பல்வேறு கூரை வகைகளை தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரித்து எடுத்து வந்து, கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பொருத்திக்கொள்ள முடியும். குறிப்பாக, பங்களா வகை தனி வீடுகள், அடுக்கு மாடி கட்டுமானங்கள் போன்றவற்றில் இதை எளிதாக கட்டமைக்க முடியும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உட்புற கூரை
சிக்கன பட்ஜெட், கட்டுமானத்திற்கான காலம் அவகாசம் குறைவு மற்றும் அழகிய தோற்றம் போன்ற காரணங்களால் மேற்கண்ட தொழில்நுட்பத்தை பலரும் பயன்படுத்தி வருவதாக அறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, அறைகளின் உட்புற கூரைகளை குடும்ப அங்கத்தினர்களின் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு டிசைன்களில் அமைத்துக்கொள்ளலாம். இந்த
முறையை கையாளும்போது தனிப்பட்ட ‘சென்டரிங்’ பணிகள் செய்ய வேண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
‘பேனல்’ அளவுகள்
முன்னதாக தயாரித்து எடுத்து வரப்பட்ட வளைவு பேனல்களை கூரையின் உட்புறத்தில் அதற்குரிய பகுதியில் பொருத்திக்கொள்ளலாம். பேனல்கள் பொதுவாக, கேட்கப்படும் அளவுகளுக்கேற்ற ‘பிளாக்’ அமைப்புகளை பொறுத்து, 16 முதல் 18 அங்குலம் அகலம் மற்றும் 40 முதல் 44 அங்குலம் நீளம் கொண்டதாக இருக்கும். மேலும், அதன் வளைந்த அமைப்புகளின் இடைவெளி 4 முதல் 6 அங்குல உயரம் கொண்டதாக இருக்கும்.
ஆர்.சி.சி பீம்கள்
அந்த அமைப்பை சுவரோடு இணைப்பதற்கு 6 மி.மீ இரும்பு ராடுகள் இணைக்கப்பட்டு, காரை நிரப்பி, தேவையான கால இடைவெளிகளில் ‘கியூரிங்’ பணிகள் செய்யப்படும். மேலும், அதற்கேற்ப தேவையான அளவுகளில் ஆர்.சி.சி பீம்கள், கட்டுமான பணியிடத்திலேயே ‘பிரீகாஸ்ட்’ முறையில் தயார் செய்யப்படுகிறது. சுவர்களுக்கு இடையே இந்த பீம்கள் நிலை நிறுத்தப்பட்டு ‘ஆர்ச் பேனல் ரூப்’ அமைக்கப்படுகிறது.
மேலும், தண்ணிர் கசிவை தடுக்கும் ரசாயன பொருட்கள் அதன் இடைவெளிகளில் நிரப்பப்பட்டு, இரண்டு பேனல்களுக்கு இடையில் உள்ள வளைவான வடிவம் கம்பிகளால் இணைக்கப்பட்டு, கான்கிரீட் மூலம் சுவரின் அமைப்புக்கேற்ப சமன் செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story