வீட்டுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் வழிமுறைகள்
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அனைத்து கட்டிடங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. வெளிப்புறத்தில் நிலவும் வெப்பம் வீடுகளுக்குள் சுலபமாக பரவி விடுகிறது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அனைத்து கட்டிடங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. வெளிப்புறத்தில் நிலவும் வெப்பம் வீடுகளுக்குள் சுலபமாக பரவி விடுகிறது. தக்க வழிமுறைகளில் அந்த வெப்பத்தை வெளியேற்றாவிட்டால், கட்டிடங்களுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட அடிப்படையாக மாறி விடுகிறது. அத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்க்க கட்டுமான பொறியாளர்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வல்லுனர்கள் அளிக்கும் கோடைகால வீட்டு பராமரிப்புகள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.
1. வீட்டிற்குள் காற்றோட்டம் வர வேண்டும் என்பதற்காக ஜன்னல் உள்ளிட்ட இதர திரை அமைப்புகளை நீக்கிவிட்டு, வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக்கூடாது. அதன் காரணமாக வீட்டிற்குள் உள்ள காற்றின் வெப்ப நிலை அதிகமாக ஆகலாம்.
2. வீடுகளில் பகல் நேரங்களில் தேவையில்லாமல் மின்சார விளக்குகளை உபயோகிப்பது தவிர்க்கப்பட வேண்டும். மின்சார விளக்குகள் வீட்டில் நிலவும் சராசரி வெப்ப நிலையின் அளவை அதிகரிக்கக்கூடும்.
3. வெளிப்புறத்தில் உள்ள வெப்பக் காற்று வீட்டிற்குள் நுழையாதவாறு வெளிர் நிறம் கொண்ட ‘காட்டன்’ வகை திரைகளை கதவு மற்றும் ஜன்னல்களுக்கு பயன்படுத்தினால், அனல் காற்று வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கப்படும்.
4. தினமும் காலை, மாலை என இரு வேளையும் இயன்ற வரையில் வீட்டை குளிர்ந்த தண்ணீரால் துடைத்து விடுவதன் மூலம் வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவும்.
5. குறிப்பிட்ட அறையில் உள்ள வெப்ப காற்றை வெளியேற்றும் வகையில் ‘எக்ஸ்ஹாஸ்ட்’ மின் விசிறியை பொருத்தலாம். அதாவது, சமையலறை மற்றும் படுக்கை அறை ஆகியவற்றில் அந்த மின் விசிறியை பொருத்தும்போது வெப்பக் காற்று வெளியேற்றப்படுவதன் காரணமாக அந்த அறைகள் குளிர்ச்சியாக மாறும்.
6. குறிப்பாக, படுக்கை அறை குளிர்ச்சியாக இருக்க, டேபிள் மின் விசிறியின் முன் புறம் அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்ட நிலையில், மின் விசிறி இயங்கினால், படுக்கை அறைக்குள் குளிர்ச்சி நிலவும்.
7. மாலை மற்றும் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஜன்னல்களை திறந்து வைப்பதன் மூலம், வீட்டிற்குள் காற்றோட்டம் அதிகரித்து, குளிர்ச்சியான சூழல் ஏற்படும்.
Related Tags :
Next Story