செங்கல் சுவருக்குள் இருப்பதை அறியும் தொழில்நுட்பம்


செங்கல் சுவருக்குள் இருப்பதை அறியும் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 18 May 2018 9:30 PM GMT (Updated: 18 May 2018 11:56 AM GMT)

வலிமையான செங்கல் சுவருக்கு உள்புறத்தில் அல்லது மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி இருக்கிறது.

லிமையான செங்கல் சுவருக்கு உள்புறத்தில் அல்லது மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி இருக்கிறது. அதற்காக, புது வகையான கருவியை உருவாக்காமல். தற்போது நடப்பில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தியே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

வை–பை அலைகள்

கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட அவரது ஆராய்ச்சி குழுவினர் இரண்டு ‘ட்ரோன்கள்’ மூலம் ‘வை–பை’ மூலம் அலைகளை அனுப்பி அவற்றைப் பெறக்கூடிய குறிப்பிட்ட சில கருவிகளை மட்டும் பயன்படுத்தி மேற்கண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

ட்ரோன்கள் பயன்பாடு

அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு ‘ட்ரோன்கள்’ பயன்படுத்தப்பட்டன. அதாவது, செங்கல் சுவருக்கு ஒரு புறமிருந்து முதல் ‘ட்ரோன்’ அனுப்பும் வை–பை அலைகளை மறுபக்கம் உள்ள இரண்டாவது ‘ட்ரோன்’ பெற்றுக்கொண்டது. அந்த அலைகள் செங்கல் சுவரை ஊடுருவி செல்வதன் மூலம், சுவருக்குள் முன்னதாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அறிய முடிந்தது. 

அலை வரிசை மாற்றம்

அதாவது, வை–பை அலைகள் சுவர்களைக் கடந்து செல்லும்போது ஏற்படும் அலைவரிசை மாற்றம் மற்றும் இழப்பு ஆகியவற்றை கணக்கிட்டு சுவருக்குள்ளே இருக்கும் பொருட்களை கச்சிதமாக ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

விரிசல்களை அறியலாம்

இந்த தொழில்நுட்ப முறையின் மூலம் கட்டிட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா..? என்பதை கண்டறியவும், கட்டிடங்களில் உருவாகும் விரிசல்கள் பற்றியும் சுலபமாக கண்டறிய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story