குரல் மூலம் இயங்கும் நானோ மின்விளக்குகள்
தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளில் மின்சார விளக்குகளின் பயன்பாடு தவிர்க்க இயலாதது.
தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளில் மின்சார விளக்குகளின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. நாளுக்கு நாள் அவற்றின் தேவைகள் அதிகரித்து வருவதற்கேற்ப புதிய தொழில்நுட்ப அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றன. இன்றைய நிலையில் மின்சார சிக்கனத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நவீன மின் விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன.
‘நானோ பேனல்’
அந்த வரிசையில் மேலை நாடுகளில், நானோ தொழில்நுட்பம் மூலம் ஒளிரக்கூடிய ‘எல்.இ.டி பேனல்’ மின்விளக்குகள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை, இதர மின்சார விளக்குகளைப்போல போன்று இல்லாமல் சுவரில் எளிதாக ஒட்டிக்கொள்ளும் வகையில் முக்கோண வடிவ பட்டை வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன.
எளிதாக இணைக்கலாம்
ஒரு பெட்டியில் 9 முக்கோண வடிவ பேனல்கள் இருக்கும். அவை ஒன்றுடன் ஒன்று எளிதாக ‘சிப்’ மூலம் இணைக்கப்படும் வகையில் தக்க துளைகள் அனைத்து பேனல்களிலும் அமைக்கப்பட்டிருப்பதால், அவற்றை இணைத்து வெவ்வேறு வடிவங்களை உருவாக்க இயலும். இந்த வகை ‘லைட் செட்டிங்குகளை’ சுவர்களில் எப்படி வேண்டுமானாலும் ஒட்ட வைத்து பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட்போனிலும் இயங்கும்
குறைவான மின்சாரத்தில் இயங்கக்கூடியதாக இருப்பதோடு, வீடுகளில் பயன்படும் 240 வோல்ட் அளவை விட குறைந்த மின் அழுத்தமே இதற்கு போதுமானது. குறிப்பாக, ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அதற்குரிய ‘அப்ளிகேஷன்கள்’ மூலம் சுலபமாக இந்த நானோ மின்விளக்கை இயங்கச்செய்யலாம்.
குரல் வழி இயக்கம்
‘SI-RI’ (Speech Interpretation and Recognition Interface) என்று சொல்லப்படும் குரல் வழி கட்டளைகளுக்கேற்ப இயங்கும் தொழில்நுட்பமும் இந்த லைட் பேனல்களில் இருப்பதால், ஒருவரது விருப்பத்திற்கேற்ப எந்த வண்ணத்தையும் வீடுகளுக்குள் பரவச்செய்யலாம். குறிப்பாக, இவ்வகை லைட் பேனல்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலர் ‘காம்பினேஷன்களை’ உருவாக்கி ஒளிர வைக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
கூடுதல் பட்ஜெட்
‘நானோ லைட் பேனல்கள்’ கிட்டத்தட்ட 3 வருடங்கள் வரை செயல்படும் தன்மை கொண்டதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வரும் நிலையில், நமது நாட்டின் பெருநகரங்களில் சமீபத்தில் இவ்வகை ‘பேனல் நானோ லைட்’ வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன. ஆனால், அனைவருக்கும் பொருத்தமான பட்ஜெட்டில் இவ்வகை ‘நானோ’ மின்விளக்குகள் கிடைக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
Related Tags :
Next Story