குழந்தைகள் படிக்கும் அறைக்கு வாஸ்து குறிப்புகள்
தற்போதைய நகர வாழ்க்கை முறைகளில் சுட்டி குழந்தைகளுக்கான படிக்கும் அறையை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாக மாறி வருகிறது.
தற்போதைய நகர வாழ்க்கை முறைகளில் சுட்டி குழந்தைகளுக்கான படிக்கும் அறையை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாக மாறி வருகிறது. அவர்களது அறையில் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகள் பற்றி நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இங்கே காணலாம்.
* குழந்தைகளுக்கான படிக்கும் அறை வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைவது சிறப்பான பலன்களை அளிக்கக்கூடியதாகும்.
* வடகிழக்கில் உள்ள படிக்கும் அறையில் கிழக்கு நோக்கி படிக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி சிறப்பாக செயல்படுகிறது என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
* அவ்வாறு வடகிழக்கு பாகத்தில் படிக்கும் அறையை அமைக்க இயலாவிட்டால், அந்த பகுதியை ஒட்டிய வடக்கு அல்லது கிழக்கு பகுதியில், கிழக்கு நோக்கி படிக்குமாறு அறையை அமைத்துக்கொள்ளலாம்.
* படிக்கும் அறையின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அகலமான ஜன்னல்கள் இருப்பது முக்கியமானது.
* குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு, டேபிள் மற்றும் சேர்களை அமைக்க வேண்டும்.
* பொதுவாக, குழந்தைகள் படிக்கும் அறையில் கனமான பொருட்கள் எதுவும் வைக்கப்படக்கூடாது.
* அலமாரி அல்லது பரண்கள் போன்றவற்றை ரெடிமேடாகவோ அல்லது கட்டுமானமாகவோ கிழக்கு அல்லது வடக்கு சுவர்களில் அமைப்பது கூடாது.
* தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கான படிக்கும் அறை அமைவது நல்ல பலன்களை தருவதில்லை என்று வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
* பொதுவாக, படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து அறைகளுக்கும் பிங்க், வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் பச்சை ஆகிய நிறங்கள் பொருத்தமானதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story