கட்டுமான பணிகளில் வெளிப்படும் சக்திகள்


கட்டுமான பணிகளில் வெளிப்படும் சக்திகள்
x
தினத்தந்தி 19 May 2018 1:41 PM IST (Updated: 19 May 2018 1:41 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு மூலப்பொருட்களைக்கொண்டு கட்டுமான வடிவமைப்பு பணிகள் செய்யப்படும்போது, வெவ்வேறு இயற்கை சக்திகளை ஒன்றிணைத்து செயல்படுவதன் காரணமாக காற்று மண்டலம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை குறிப்பிட்ட அளவு பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

ல்வேறு மூலப்பொருட்களைக்கொண்டு கட்டுமான வடிவமைப்பு பணிகள் செய்யப்படும்போது, வெவ்வேறு இயற்கை சக்திகளை ஒன்றிணைத்து செயல்படுவதன் காரணமாக காற்று மண்டலம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை குறிப்பிட்ட அளவு பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்’ என்ற தொழில்நுட்ப அமைப்பின் வல்லுனர்கள் கட்டிடக் கலையில் ‘எம்பாடிடு எனர்ஜி’ என்ற கருத்தாக்கம் மூலம், கட்டுமான பொருட்களில் பயன்படும் சக்தியின் அளவை நிர்ணயம் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

சக்தியின் பயன்பாடு

உள் நிறை ஆற்றல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் ஆற்றலின் அளவைக் குறிக்கிறது. அந்த முறையின்படி, மூலப்பொருள்களை எடுப்பது, அதனை போக்குவரத்து மூலம் கொண்டு செல்வது, கட்டுமானப் பொருளாக மாற்றுவது, அவற்றை கட்டுமான இடத்தில் நிறுவுவது போன்ற பல்வேறு நிலைகளில் பயன்படும் சக்தியின் வெளிப்பாட்டை இந்த முறை அளவீடு செய் கிறது.

கரியமில வாயு

ஒரு கல்லை இருந்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் எவ்வளவு கார்பன்-டை ஆக்ஸைடு செலவாகிறது என்பதை கணித்து அறிவதும் மேற்கண்ட உள் நிறை ஆற்றல் என்ற ‘எம்பாடிடு எனர்ஜி’ முறைக்குள் அடங்குகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டில் கார்பன்-டை ஆக்ஸைடு வெளிப்படுவது ‘நம்பர் ஒன் கிரே எனர்ஜி’ என்று சொல்லப்படுகிறது.

கூடுதல் சக்தி

மலையாக இருந்த பாறையை சிறிய கற்களாக உடைக்க தேவைப்படுவது தயாரிப்பிற்கான சக்தியாக சொல்லப்படும். அவற்றை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது ‘கிரே எனர்ஜி’ ஆகும். அதை கான்கிரீட் கட்டிடமாக அமைப்பது உள்ளிட்ட பல்வேறு சிமெண்டு பணிகளுக்கு மேலும் கூடுதலான சக்தி செலவிடப்படுகிறது.

சூழல் பாதுகாப்பு

உலக அளவில் அதிகமாக கார்பன்-டை ஆக்ஸைடு வாயு வெளியாவது சிமெண்டு தயாரிப்பு மூலம் என்று அறியப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளில் சிமெண்டு பயன்பாட்டை இயன்ற அளவுக்கு குறைப்பதன் மூலம் கார்பன்-டை ஆக்ஸைடு காற்றில் கலப்பதை ஓரளவாவது கட்டுப்படுத்த இயலும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பசுமை குடியிருப்பு

கார்பன்-டை ஆக்ஸைடு வெளியாவதை இயன்ற அளவுக்கு குறைக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகளை செய்ய வழிகாட்டும் முறையானது பசுமை குடியிருப்பு என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இயற்கையான கருங்கற்களைப் பயன்படுத்தி அஸ்திவாரங்கள் அமைப்பதால் 30 சதவிகித அளவு கார்பன்-டை ஆக்ஸைடு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.

Next Story