குறைவான ஒளி தரும் விளக்கு அமைப்புகள்


குறைவான ஒளி தரும் விளக்கு அமைப்புகள்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:00 AM IST (Updated: 1 Jun 2018 4:54 PM IST)
t-max-icont-min-icon

மெல்லிய ஒளி அதாவது ‘டிம் லைட்டிங்‘ என்பது வீட்டின் அறைகளுக்கு பிரகாசமான வெளிச்சத்தை வழங்காமல், கலை நயத்துடன் மெல்லிய வெளிச்சத்தை வழங்குவதாகும்.

 ‘டிம் லைட்டிங்‘ முறைகளை பெரும்பாலும் அருங்காட்சியகங்கள் மற்றும் கலையரங்கங்களில் பார்த்திருக்கலாம். 

பெரிய அறையாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப குறைவான வெளிச்சத்தை தரும் விளக்குகளை பயன்படுத்தும் ‘டிம் லைட்டிங்’ முறை தற்போது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

மின் செலவு குறைவு

மேற்கண்ட முறையில் வீட்டில் விளக்குகளை பயன்படுத்துவதால் மின் செலவு குறைகிறது. மேலும், விளக்குகள் மிதமான வெளிச்சத்துடன் ஒளிர்வதால் மற்ற விளக்குகள் பயன்பாடு அதிகமாக வேண்டியதில்லை. மேலும், கலை நயமான விளக்கு ஒளி என்பதால் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் அழகாக தெரியும். 

கலை நயமான தோற்றம்

பெரும்பாலும் ஓவியங்களில் வெளிச்சத்தை படரவிடும் விளக்குகளாக உள்ள இவற்றை முதன்மை விளக்குகளாக பயன்படுத்துவதால், வீடு கலைநயமாக தோன்றமளிக்கிறது. வீட்டை அலங்கார பொருட்களை கொண்டு அலங்கரிப்பதற்கு மாற்றாக ‘டிம்’ விளக்குகள் பயன்படுகின்றன. சாதாரண விளக்குகளை போன்றே இந்த விளக்குகளையும் பயன்படுத்துவதோடு, பராமரிப்பும் எளிமையானது. இவற்றில், மின்சாரத்தை சேமிக்கும் விளக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அழகான வரவேற்பறை

வீடுகளுக்கு வரக்கூடிய விருந்தினர்கள் முதலில் அமரும் இடம் வரவேற்பறை என்பதால், ரம்யமான மெல்லிய ஒளி அங்கே இருப்பது சந்தோ‌ஷமான உணர்வை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது. மிதமான வெளிச்சம் தரும் விளக்குகளை வரவேற்பறையில் இருக்கவேண்டும். அலங்காரமான விளக்குகளை அமைப்பதாலும் ரசனை வெளிப்படும்.

மனதுக்கு அமைதி

படுக்கையறைக்கு மெல்லிய வெளிச்சம் தரும் விளக்குகள் அமையவேண்டும். மனதுக்கு அமைதி தரும் வகையில் வண்ண ஒளியைப் படரவிடும் விளக்குகளை அங்கே பொருத்தமானது. அன்றாட வேலைகளைச் சிரமின்றி செய்ய ஏதுவாக தகுந்த விளக்குகள் வீட்டில் பொருத்தப்படும் பட்சத்தில் அன்றாட வேலைகளை எளிதாக மேற்கொள்ள இயலும். மேலும், விளக்கின் வெளிச்சம் அறைக்கு அழகையும் மனத்திற்கு நிம்மதியையும் தரும். 

Next Story