உற்சாகம் அளிக்கும் செயற்கை நீரூற்று


உற்சாகம் அளிக்கும் செயற்கை நீரூற்று
x
தினத்தந்தி 2 Jun 2018 4:15 AM IST (Updated: 1 Jun 2018 4:59 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் மனித உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாக இருக்கிறது.

* வீடுகளில் அமைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை குறிக்கும் படங்கள், மீன் தொட்டிகள் மற்றும் நீரூற்றுகள் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெற்றவையாக கருதப்படுகின்றன. 

* இயற்கையின் சக்தி வடிவமாக பார்க்கப்படும் தண்ணீர் எல்லா இடங்களிலும், காலங்களிலும் மனிதர்களுக்கு தவிர்க்க இயலாத வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

* உலகை ஆளும் ஐந்துவிதமான சக்திகளில் முக்கியமான சக்தியாக கருதப்படுவது தண்ணீராகும். ஒரு வீட்டு மனையின் வடகிழக்கு பகுதியான ஈசானிய மூலையானது நீரின் சக்தியை குறிப்பிடக்கூடியது.

*தண்ணீர் வரும்வழி, வெளியேறும் வழி, தரையடி நீர்த்தொட்டி போன்ற அனைத்தும் அப்பகுதியில் தான் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வாஸ்து விதியாகும்.

* பொருளாதார வளர்ச்சிகளை குறிப்பிடக் கூடிய இடமாக ஈசானியம் கருதப்படுவ தால் அதிகப் படியான கவனத்தை பெறுகிறது. பொதுவாக குபேர திக்கான வடக்கில் அமைக்கப் படும் செயற்கை நீரூற்றானது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத் துவதாக நம்பப்படுகிறது. 

Next Story