குடியிருப்புகளுக்கு இடையில் கட்டிட அஸ்திவார பணிகள்


குடியிருப்புகளுக்கு இடையில் கட்டிட அஸ்திவார பணிகள்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 5:05 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில், பல்வேறு அகலம் மற்றும் உயரம் கொண்ட கட்டிடங்களுக்கு மத்தியில் வேறொரு கட்டிடத்தின் அஸ்திவார பணிகளை செய்வது ஒருவகையில் சவாலான வி‌ஷயம்.

ன்றைய காலகட்ட நகர்ப்புறங்களில் ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப கட்டிடங்கள் உயரம் மற்றும் அகலம் ஆகிய இரு நிலைகளில் வளர்ச்சி பெற்றதாக மாறி வருகின்றன. குறிப்பாக, நெருக்கமாக குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டுமான பணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

விரிசல்கள் வரலாம்

அவ்வாறு புதிய கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் மிக அருகில் மற்ற கட்டிடங்கள் அமைந்திருக்கலாம். அந்த நிலையில் அந்த கட்டிடங்களுக்கு அருகில் செய்யப்படும் அஸ்திவாரம் தோண்டும் பணிகளால் சுவர்களில் விரிசல் அல்லது சரிந்து விடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுபோன்ற சமயங்களில் அவர்களால் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப அணுகுமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

கட்டிட வடிவமைப்பாளர் ஆலோசனை

நிலத்தின் மதிப்பு சற்று அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில், பல்வேறு அகலம் மற்றும் உயரம் கொண்ட கட்டிடங்களுக்கு மத்தியில் வேறொரு கட்டிடத்தின் அஸ்திவார பணிகளை செய்வது ஒருவகையில் சவாலான வி‌ஷயம். அந்த சமயத்தில் முதலாவதாக, ‘ஸ்ட்ரக்சுரல் டிசைனர்’ எனப்படும் கட்டிட வடிவமைப்பாளரின் ஆலோசனைகளை பெறுவதோடு, தற்போது தோண்டப்படும் அஸ்திவாரத்தின் ஆழம் என்ன என்பதன் அடிப்படையில் வெவ்வேறு முறைகள் கையாளப்படுகிறது.

1. அந்த பகுதியில் உள்ள மண் அடுக்குகள் அமைப்பு, அதன் தன்மைகள், எவ்வகையான மண், நிலத்தடி நீர்மட்டம் உள்ள அளவு ஆகிய பல்வேறு புவியியல் அமைப்புகள் நிபுணர்களால் கணக்கில் கொள்ளப்படும்.

2. மேற்கண்ட சூழலில், கட்டமைப்புக்கான அஸ்திவாரம் முழுவதையும் ஒரே தடவையில் தோண்டப்படுவதில்லை. தூண்கள் அமைப்பிற்கான அஸ்திவார குழிகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்படுவது வழக்கம். அதன் காரணமாக, பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு பெரிய பாதிப்புகள் வராது.

3. பக்கத்தில் உள்ள கட்டிடங்களின் அஸ்திவார அமைப்புகள் எந்த அளவு ஆழத்தில் உள்ளதோ அதைவிடவும் அதிகமான ஆழத்தில் புதிய கட்டிடத்தின் அஸ்திவாரம் அமையும்போது,  ‘Diaphragm Wall’ அமைப்பது போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

4. மேலும், அஸ்திவார பணிகளில் ‘காலம் பூட்டிங்‘, தூண்கள் அமைப்பு, கான்கிரீட் நிரப்பும் பணி ஆகிய பணிகளை குறைந்த காலகட்டத்தில் அதாவது ஓரிரு நாட்களுக்குள் செய்து முடிக்கப்படுவதோடு, அந்த சமயங்களில் அதிர்வுகள் அதிகமாக ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்படும்.

5. அஸ்திவார குழிகளில் நீர்தேங்காதவாறு பார்த்துக்கொள்ளப்படுவதோடு, தேவைகளுக்கேற்ப பக்கவாட்டில் முட்டுக்கள் அல்லது தக்க ‘‌ஷட்டர்’ அமைப்புகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்படும்.

6. பக்கத்தில் உள்ள கட்டிடமும் 30 ஆண்டுகளை கடந்ததாக இருக்கும் பட்சத்தில் அதன் அஸ்திவார சுவர்கள் கட்டிடத்தின் பளுவை தாங்கும் நிலையில் இருந்தால் அவற்றின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். 

7. மேலும், புதியதாக தோண்டப்பட்ட அஸ்திவார பணிகளில் பயன்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட், பில்லர் மெட்டீரியல்ஸ் மற்றும் மண் போன்றவை அவசரமான சூழ்நிலைகளுக்கு பயன்படுவதுபோல் தயாராக இருக்கவேண்டும்.  

Next Story