வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது...
சம்பளதாரர்களுக்கு ஓய்வுபெறும் வரையிலும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு 65 வயது வரையிலும் என இருப்பதைக் கணக்கில் கொண்டு வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வீட்டு வரைபடத்துக்கான அனுமதி வாங்கிய பிறகே வீட்டுக் கடனுக்கு வங்கியில் விண்ணப்பம் செய்ய முடியும். திட்ட மதிப்பில் 80 சதவிகிதம்வரை வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதை வங்கிகள் விரும்புகின்றன. அதாவது, கடனை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கூடுதலாக இருப்பதாக வங்கிகள் கருதுகின்றன.
வயது அதிகமாக இருக்கும்பட்சத்தில் திருப்பிச் செலுத்தும் மாதத்தவணை அதிகமாக இருக்கும். திருப்பிச் செலுத்தும் வயது வரம்பு சம்பளதாரர்களுக்கு ஓய்வுபெறும் வரையிலும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு 65 வயது வரையிலும் என இருப்பதைக் கணக்கில் கொண்டு வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குடும்ப அங்கத்தினர்கள் வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால், அவர்களையும் கடன் இணை விண்ணப்பதாரராக சேர்த்துக் கொள்ளலாம். கடன் விண்ணப்பதாரரின் பெயரில் வீடு–மனை இருக்கும்பட்சத்தில் வேறு நபர்கள் பெயரில் கடன் கிடைக்காது என்ற நிலையில் அவர் முதன்மை விண்ணப்பதாரராகவும், இணை விண்ணப்பதாரராக வேறு நபர்களையும் சேர்த்து கடன் பெறலாம்.
Related Tags :
Next Story