கட்டிட விரிசல்களில் வளரும் செடிகளால் பாதிப்பு


கட்டிட  விரிசல்களில்  வளரும் செடிகளால்  பாதிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 2:45 AM IST (Updated: 15 Jun 2018 5:43 PM IST)
t-max-icont-min-icon

கட்டமைப்புகளின் செங்கல் சுவர்கள் அல்லது கான்கிரீட் பரப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் கவனிக்கப்படாமல் விடப்படும் நிலையில், அந்த வெடிப்புகளுக்கு இடையில் மண்துகள்கள் அடைத்துக்கொண்டிருக்கும்.

ட்டமைப்புகளின் செங்கல் சுவர்கள் அல்லது கான்கிரீட் பரப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் கவனிக்கப்படாமல் விடப்படும் நிலையில், அந்த வெடிப்புகளுக்கு இடையில் மண்துகள்கள் அடைத்துக்கொண்டிருக்கும். தற்செயலாக, காகங்கள் உள்ளிட்ட பறவைகளின் எச்சங்கள் மூலம் பரவும் விதைகள், அந்த விரிசல்களில் சென்று விடுகின்றன. 

மழை அல்லது ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவை செடிகளாக முளைத்து, சுவர் விரிசல்களை மேலும் அதிகரிக்க காரணமாக மாறுகின்றன. 

அது போன்ற செடி வகைகளை உடனடியாக கவனித்து அகற்றாவிட்டால், வேர்களின் வளர்ச்சி மற்றும் அழுத்தம் ஆகியவற்றால் விரிசல்கள் அதிகரித்து, சுவர் அல்லது கான்கிரீட் பரப்பின் வலுவை குறைத்து விடுகின்றன.

வீடுகளின் அழகுக்காக பூஞ்செடிகள் உள்ளிட்ட இதர சிறுவகை செடிகள் தொட்டிகளில் வைக்கப்படுகின்றன. அவற்றுக்கு அவ்வப்போது தண்ணீர் விடப்படும் பட்சத்தில் நிலத்தின் அடியில் தேங்காமல் இருக்கவேண்டும். 

அவ்வாறு நீர் தேங்கும் நிலையில் சன்ஷேடு மற்றும் பால்கனி ஆகிய பகுதிகளில் உள்ள இரும்புக்கம்பிகளில் நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

Next Story