கைரேகை பதிவு மூலம் செயல்படும் நவீன பூட்டு


கைரேகை  பதிவு  மூலம் செயல்படும்  நவீன  பூட்டு
x
தினத்தந்தி 15 Jun 2018 10:00 PM GMT (Updated: 15 Jun 2018 12:16 PM GMT)

வீடு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை பாதுகாப்பதற்கான பூட்டு சிறியதாகத்தான் இருக்கும் என்ற சொல் வழக்கு உண்டு.

வீடு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை பாதுகாப்பதற்கான பூட்டு சிறியதாகத்தான் இருக்கும் என்ற சொல் வழக்கு உண்டு. இன்றைய காலகட்ட பூட்டு வகைகள் சிறியதாக இருந்தாலும், பாதுகாப்பின் அடிப்படையில் பல்வேறு தொழில்நுட்ப திறன்களுடன் வடிவமைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. 

நவீன பூட்டு வகைகள்

கதவுகளில் பொருத்தப்படும் நவீன பூட்டுக்களில், ‘சிலிண்டரிக்கல் டோர் லாக்’, ‘எலக்ட்ரோ மேக்னடிக் லாக்’, ‘பேனல் லாக்’, ‘அல்ட்ரா பர்னிச்சர் லாக்’ என்று பல்வேறு தர நிலைகளில் ஏகப்பட்ட பூட்டு மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. கதவுகளில் சாதாரணமாக தொங்கும் வகை பூட்டுகளில் ஒரு லாக் மட்டும் இருந்த நிலையில், இன்றைய தயாரிப்புகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு லாக் என்ற நிலையில் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன. 

உள்புற லாக்கிங் சிஸ்டம்

பூட்டுக்களில் எவர்சில்வர், அலுமினியம், மெட்டல், கோல்டு கோட்டிங் ஆகிய தயாரிப்புகள் உள்ளன. கதவுகளில் உள்புறமாக பொருத்தப்படும் ‘லாக் சிஸ்டம்’ பூட்டை கிட்டத்தட்ட ஐந்து அங்குல ஆழம் கொண்ட துளையிட்டு, ‘லாக் பிட்டிங்’ செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு ‘பிட்டிங்’ செய்யப்பட்ட அமைப்பை சுலபமாக தனியாக கழற்றி எடுக்க முடியாது. மெயின் கதவுக்கான கைப்பிடியுடன் கூடிய பூட்டுகள் விதவிதமான ‘லாக்கிங் சிஸ்டம்’ கொண்டதாகவும் சந்தையில் இப்போது கிடைக்கின்றன.

 கைரேகை பதிவு

பெரு நகரங்களில் குடியிருப்புகளின் பாதுகாப்பு கருதி, ‘பிங்கர் பிரிண்டு’ பூட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பூட்டுகள் வங்கி லாக்கர் மற்றும் ரகசிய அறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதாவது, விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட நபர்கள் மூலமே பூட்டை திறக்க முடியும். அதற்கு மாற்று முறையாக, ரகசிய குறியீடுகள் கொண்ட எண்களை பதிவு செய்து பூட்டை பயன்படுத்தும் முறையும் இருக்கிறது. 

குடும்ப உறுப்பினர்கள்

‘பிங்கர் பிரிண்டு லாக்கிங் சிஸ்டம்’ முறையானது குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகளையும் தமது நினைவகத்தில் வைத்திருந்து அவற்றை செயல்படுத்தும் திறன் கொண்டது. மேலும், தேவையான நபர்களின் கைரேகைகளை எளிதாக பதிவு செய்து கொண்டும் பயன்படுத்தலாம். இவ்வகை பூட்டின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய ‘கவரை’ விலக்கி விட்டு, கைரேகைகளை பதிப்பதன் மூலம் பூட்டு எளிதாக திறந்து கொள்ளும். ‘நம்பர் லாக்’ முறையும் தேவைக்கேற்ப இவ்வகை பூட்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story